• Nov 17 2024

'இட ஒதுக்கீட்டை ஒழித்து விடுவேன்'... வாத்தி பட இயக்குநரால் கிளம்பிய புது சர்ச்சை!!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் நடிகர் தனுஷின் இருமொழி படமான ‘வாத்தி’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பார்த்துவிட்டு பலரும்  கலவையான விமர்சனம் செய்து வருகின்றனர். 

1990-ஸ் காலத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் கல்விச் சூழலில் உள்ள பிரச்சனைகளை எடுத்துரைக்கிறது. படத்தில் ரொமான்ஸ், ஆக்‌ஷன், சென்டிமென்ட் என அனைத்தையும் நேர்த்தியாக எடுத்துச் சென்றிருக்கிறார் இயக்குநர் வெங்கி அட்லூரி.

சமீபத்திய பேட்டி ஒன்றில், இயக்குநர் வெங்கி அட்லூரிடம் நீங்கள் மத்திய அமைச்சரானால் என்ன செய்வீர்கள்? என கேட்டதற்கு, ‘நான் ஒருவேளை மத்திய கல்வி அமைச்சரானால் இடஒதுக்கீட்டை ஒழித்துவிடுவேன். இடஒதுக்கீட்டை பொருளாதார அடிப்படையில் வழங்கவேண்டும். சாதி அடிப்படையில் வழங்கக்கூடாது என மாற்றுவேன்’ என்றார். 

தற்போது, இந்த பேச்சுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், வாத்தி திரைப்படத்தில், தனுஷ் ஆசிரியராக தனது பாத்திரத்தில், தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். 

நாயகி சம்யுக்தா ‘வா வாத்தி’ பாடலை ரசிக்க வைத்திருக்கிறார். இசைமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது இசையால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.


Advertisement

Advertisement