• Nov 19 2024

சரக்கை முடிச்ச பிறகுதான் லியோவில் நடிப்பேன் - மன்சூர் அலிகான் தடாலடி..நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என நான்கு படங்களையுமே ஹிட் படங்களாக கொடுத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். ஒரு இயக்குநர் நான்கு படங்களையும் ஹிட் படங்களாக கொடுப்பது அரிதிலும் அரிதாக மட்டுமே நடக்கும் என்பதால் லோகேஷ் கனகராஜ் கவனிக்கப்படும் இயக்குநர்களில் ஒருவராக மாறியிருக்கிறார்.மேலும்  அவரது இயக்கத்தில் நடிப்பதற்கு பல நடிகர்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

 விஜய் கடைசியாக வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்தார். பைலிங்குவலாக தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான அந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.எனினும்  இதனையடுத்து தனது கேரியரில் மெகா ஹிட்டுகளில் ஒன்றான மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜுடன் இணைந்திருக்கிறார் விஜய். அத்தோடு இவர்கள் இருவரும் இரண்டாவது முறை இணையும் படத்துக்கு லியோ ப்ளடி ஸ்வீட் என்று பெயரிடப்பட்டுள்ளது.

அத்தோடு விக்ரம் படம் போலவே இந்தப் படத்திற்கான டைட்டிலையும் ப்ரோமோவுடன் வெளியிட்டார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். பான் இந்தியா படமாக உருவாகும் லியோவில் சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மாத்யூ தாமஸ், மிஷ்கின், மன்சூர் அலிகான், த்ரிஷா, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் ஷூட்டிங்கிற்காக சில மாதங்களுக்கு முன்பு காஷ்மீருக்கு சென்றது படக்குழு. அங்கு விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்துவந்தது. கிட்டத்தட்ட 2 மாதங்கள் அங்கு முகாமிட்டிருந்த படக்குழு சில வாரங்களுக்கு முன்பு ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பியது. எனினும் தற்போது லியோ படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மன்சூர் அலிகானின் தீவிர ரசிகர் ஆவார். அவரது கேரியரில் பெரும் திருப்புமுனையாக அமைந்த படமான கைதி படத்தின் கதையை மன்சூர் அலிகானுக்காகத்தான் எழுதினார் லோகேஷ். கடைசியாக அவர் இயக்கிய விக்ரம் படத்தில்கூட மன்சூர் அலிகானின் ஆடிய பாடலை வைத்திருப்பார்.

இப்படி மன்சூரின் தீவிரமான ரசிகர் லோகேஷ். எனவே அவரது படத்தில் எப்போது மன்சூர் நடிப்பார் என கேள்வி எல்லோரிடமும் இருந்தது.எனினும்  இதனையடுத்து லியோ படத்தில் மன்சூருக்காக ஒரு கேரக்டர் எழுதியிருப்பதாக தெரிவித்து கமிட்டாக்கினார் லோகேஷ்.

 லியோ படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவரும் சூழலில் மன்சூர் அலிகானின் போர்ஷன் என்ன ஆனது என்பது குறித்து தெரியாமல் இருந்தது. இவ்வாறுஇருக்கையில்  பட தொடக்க விழா ஒன்றில் கலந்துகொண்ட மன்சூர் செய்தியாளர்களிடம் பேசி இருந்தார். அப்போது பேசுகையில், "இன்னமும் நான் லியோ படத்தில் நடிக்கவே ஆரம்பிக்கவே இல்லை. இப்போது சரக்கு என்ற என்னுடைய படத்தில் நடித்துவருகிறேன்.

சரக்கை முடித்துவிட்டுத்தான் லியோவுக்கு போகப்போகிறேன்.அத்தோடு  காஷ்மீர் ஷெட்யூல் முடித்த பின்னர் தான் எனக்கான ஷூட்டிங் என ஏற்கனவே  தெரிவித்து இருந்தார். அதற்காக என்னிடம் நிறைய நாள்கள் கால்ஷீட்டும் வாங்கியிருக்கிறார்கள். விஜய்யுடன் ஏற்கனவே 10 படங்களில் நடித்திருக்கிறேன். மீண்டும் அவருடன் நடிப்பது எனக்கு மகிழ்ச்சியையே கொடுக்கிறது" என்றார்.


Advertisement

Advertisement