• Sep 20 2024

'அஜித்தைப் பார்த்தால் இந்த கேள்வி தான் கேட்பேன் விஜய் என்னோட தம்பி'- புதிய தகவலைக் கூறி சர்ப்ரைஸ் தந்த நடிகர் அமீர்கான்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக வலம் வருபவர் தான் நடிகர் அமீர்கான். இவர் தற்பொழுது டாம் ஹாங்க்ஸ் நடித்த FORREST GUMP படத்தின் ரீமேக்கில் கம்ப் கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தை இயக்குநர் அத்வைத் சந்தன் இயக்குவதோடு அமர்கானே தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் ஊடாக இப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது.ஏற்கனவே இந்த படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் நாக சைதன்யா, பாலராஜூ எனும் கதாபாத்திரத்தில் ராணுவ வீரனாக நடித்துள்ளார். நடிகர் ஆமிர் கான் லால் சிங் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் ரூபா எனும் கதாபாத்திரத்தில் நடிகை கரீனா கபூர் நடிப்பதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் வருகிற 11 ஆகஸ்ட் 2022 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் வெளியீட்டை ஒட்டி பிரபல சேனலுக்கு பிரத்யேகமான பேட்டிளித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் குறித்து ஆமிர் கான் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகள் என்ன? என்ற தளத்தில் நடிகர் அஜித்திடம் கேட்க விரும்பும் கேள்வியாக "அஜித்தை நான் பார்க்கும் போதெல்லாம் அவரிடம் உள்ளார்ந்த ஆற்றல் சக்தி எப்போதும் அதிகம் இருப்பதாக உணர்கிறேன். அதை எப்பொழுதும் பயன்படுத்தும் உத்வேகத்துடன் அஜித் இருப்பார். இந்த ஆற்றல் சக்தி எங்கிருந்து உங்களுக்கு கிடைத்தது என கேள்வி கேட்பேன்" என ஆமிர் கான் பேசியுள்ளார். மேலும் விஜய் குறித்து பேசும் போது விஜய் எனக்கு தம்பி போல என கூறியுள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement