• Sep 20 2024

உயிரே உன் உயிரென நான் இருப்பேன்-காரில் தனது காதல் மனைவியுடன் ஊர் சுற்றும் நவீன்- லேட்டஸ்ட் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக சின்னத்திரை பிரபலங்கள் பலரும் திருமண பந்தத்தில் இணைந்து வருவது ரசிகர்களிடையே மகி்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் கடந்த ஜுன் மாதம் 10ம் திகதி திருமண பந்தத்தில் இணைந்தவர்கள் தான் நவீன் மற்றும் கண்மணி.

இவர்களின் திருமண விழாவிற்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அந்த வகையில் நவீன் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே சீரியலில் நடித்து பிரபல்யமானவர்.

அதே போல கண்மணி சன்டிவியில் முக்கிய செய்தி வாசிப்பாளராக இருந்த வருகின்றார். இவர்கள் இருவரும் பெற்றோர் சம்மதத்துடனே திருமண பந்தத்தில் இணைந்தனர்.

இந்த நிலையில் தற்பொழுது நவீன் மற்றும் கண்மனி திருமணம் முடிந்த கையோடு காரில் பயணிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement