தனுஷின் நானே வருவேன் படம் நேற்று ரிலீஸ் ஆகி ரசிகர் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இன்று பொன்னியின் செல்வன் படம் ரிலீஸாகி இருப்பதால் பாக்ஸ் ஆபிசில் எந்த படத்திற்கு அதிக வசூல் கிடைக்கும் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
நேற்று சோலோவாக ரிலீஸான நானே வருவேன் படம் தமிழ்நாட்டில் மட்டும் 7 கோடிக்கும் மேல் வசூலித்து உள்ளது என கூறப்படுகின்றது.
அத்தோடு வெளிநாட்டு வசூலோடு சேர்த்து நானே வருவேன் படம் உலகளவில் பெற்ற மொத்த வசூல் விவரம் தற்போது வெளிவந்திருக்கிறது. மொத்தம் 13.7 கோடி ருபாய் முதல் நாளில் இந்த படம் வசூலித்திருக்கிறதாம்.
இதில் வெளிநாட்டில் ரூ.4.07 கோடி, ஆந்திராவில் 1 கோடி ரூ, கர்நாடகாவில் 0.47 கோடி ரூ. வசூல் ஆகியவையும் அடங்கும். வரும் நாட்களில் பொன்னியின் செல்வனுக்கு இந்த படம் ஈடுகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
நானே வருவேன் படம் நல்ல வசூல் ஈட்டிவரும் நிலையில் தயாரிப்பாளர் தாணு இயக்குனர் செல்வராகவனுக்கு பெரிய மாலை அணிவித்து கெளரவப்படுத்தி இருக்கிறார்.
அத்தோடு இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல முன்னணி சேனலான சன் டிவி கைப்பற்றி உள்ளது என்றும், டிஜிட்டல் ஒடிடி உரிமத்தை பிரபல அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Listen News!