• Nov 10 2024

Periods Time-ல தான் Dance ஆடுவேன்!- அதிர்ச்சித் தகவலைக் கூறிய சாய் பல்லவி- ரௌடி பேபி பாடலுக்கும் அப்பிடித் தான் ஆடினாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தும் டான்ஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி.சிறு வயதில் இருந்தே நடனத்தின் மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாக எவ்வித நடன பயிற்சி மையங்களுக்கும் செல்லாமல், ஐஸ்வர்யாராய், மாதுரி தீட்சித், போன்ற நடிகைகளின் நடனத்தை பார்த்து பார்த்து டான்ஸில் மின்னியவர்.

நடனத்தில் மட்டுமின்றி படிப்பிலும் ஜார்ஜியாவில் இருதய நோய் நிபுணருக்கான மருத்துவ பட்டம் பெற்றவர். பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். இப்படத்தில் சாய் பல்லவி நடித்த மலர் டீச்சர் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து தெலுங்கு, மலையாளம் ,போன்ற மொழிகளில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.


இவர் நடித்த படங்களும், அடுத்தடுத்து ஹிட் லிஸ்டில் இணைந்தது மட்டுமின்றி...  இவர் ஒவ்வொரு படத்திலும் ஆடும் டான்ஸ் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. எனவே மிகவும் பிஸியான நடிகையாக மாறினார் சாய் பல்லவி.


இந்த நிலையில் இவர் அண்மையில் ஓர் பேட்டியளித்திருந்தார். அதில் நான் படங்களில் டான்ஸ் ஆடும் போது எனக்கு பீரியட்டாகத் தான் இருக்கும். எல்லாப் பாட்டுக்கும் அப்பிடித் தான்.டான்ஸ் ஆடி முடிய இரண்டு மூன்று நாள் ரயட் ஆகிடுவேன். அப்பா எல்லாம் வந்து கால் பிடிச்சு விடுவார். ரௌடி பேபி பாட்டுக்கு டான்ஸ் ஆடும் போது எனக்கு பீரியட் தான் என்றும் தெரிவித்துள்ளார். அத்தோடு புடிச்ச விஷயத்தை பண்ணும் போது அது கஷ்டமாகத் தெரியாது என்றும் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement