இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மரியநேசன் தனியார் தொலைக்காட்சியொன்றில் செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் பணிபுரிந்திருந்தார்.அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வாய்ப்பு வர போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கைத் தமிழ் பேச்சால் அனைவரின் மனதிலும் இடம்பிடித்தார்.
மேலும் பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளராக இருந்த கவினுடன் காதல் வயப்பட்டார். இந்த காதலுக்கு தந்தை எதிர்ப்பு தெரிவிக்கவே சிலகாலம் கவினுடன் பேசாமல் இருந்துவந்தார்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்ததும் அடுத்தடுத்து சில படங்களில் பிஸியாக தொடர்ந்து நடித்து வந்தார்.தற்பொழுது சமூக வலைத்தளங்களிலும் ஆக்டீவாக இருந்து வருகின்றார்.
இந்த நிலையில் இவர் அண்மையில் ஒரு பேட்டியளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது எல்லோரும் பெண்கள் ஆடை அணிவது பற்றித் தான் பேசி வருகின்றார்கள். ஆனால் ஆடை அணிவது என்பது ஒருவருடைய தனிப்பட்ட விஷயம். நான் கூட பிக்பாஸ் முதல் மாடர்ன் ட்ரெஸ் தான் போட்டிட்டு இருந்தேன். அப்பிறம் கொஞ்சம் வெயிட் போட்டதால கம்பட்டபிளான ட்ரெஸ் போட்டேன்.இப்போ வெயிட் கம்மி பண்ணினதால் எனக்கு ஈஸியாக இருக்கிற ட்ரெஸ் போறேன் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் பிக்பாஸ் எங்களுடைய சீசன்ல இருந்த எல்லோருமே,இப்போ நல்ல நிலமைல தான் இருக்கிறாங்க. எல்லோருக்கும் வாய்ப்புகள் கிடைத்து முன்னேறிட்டு வருகிறாங்க அதெல்லாம் பார்க்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு. பிக்பாஸ் ஷோ தான் என்னோட லைப்பையும் மாத்திச்சு. ஆனால் இப்போ நான் பிக்பாஸ் பார்க்கிறதில்லை. அதுக்கான டைமும் கிடைக்கிறதில்லை என்று தெரிவித்தார்.
மேலும் நான் யோகா ,ஜிம், கிளாஸ்ஷஸ்,வீடு இதைத் தவிர பார்ட்ரி பண்ணுறது என்று எங்கையும் போகமாட்டேன். எனக்கு தனியா இருக்கிறது தான் ரொம்ப பிடிக்கும்.நிறைய துரோகம் பார்த்தாச்சு,ஈசியா எல்லாரையும் நம்பிடுவேன். அதனால என்னமோ தனிய இருப்பது தான் ரொம்ப பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கவினுக்கு திருமணம் நடந்தது சந்தோஷம் தான் கெரியரில் மட்டுமல்ல அவருடைய லைஃப்லையும நல்லது நடந்திட்டு வருது அது சந்தோஷம் தான். நானும் கண்டிப்பதக லவ் மேரேஜ் தான் பண்ணிப்பேன். அது நடக்குதோ இல்லையோ தெரில ஆனால் எனக்கு லவ்ல நம்பிக்கை இருக்கு, மற்றம்படி லிவிங் ரிலேஷன்சிப்பில் இருப்பது தப்பு என்று சொல்லமாட்டேன். ஆனால் நான் இருந்து வளர்ந்து வந்த சூழலில் அப்படி ஒரு விஷயத்தை செய்ததில்லை. அதனால் நானும் அப்படி ஒரு லைப்பில் வாழுவனா என்று தெரியவில்லை என்றும் பல விஷயங்கள் பற்றி பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!