• Sep 20 2024

'வருங்காலத்தில் கண்டிப்பாக நான் விஜய்யை சந்திப்பேன்'- ஷாஜகான் பட நடிகர் இப்போது எப்படி இருக்கிறார் என்று பாருங்க

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக பீஸ்ட் என்னும் திரைப்படம் வெளியாகிருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிய இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இருப்பினும் வசூலில் அள்ளிக் குவித்தது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது வம்சி இயக்கத்தில் விஜய் தனது 66வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருவதோடு இப்படத்தில் நடிக்க இருப்பவர்களின் விவரங்கள் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

அந்த வகையில் தளபதி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்று தான் ஷாஜகான்.இப்படம் 2001ம் ஆண்டு வெளியாகி இருந்தது. இதில் விஜய்யின் நண்பராக முக்கிய வேடத்தில் கிருஷ்ணா திவாகர் என்பவர் நடித்திருந்தார்.

இவர் அண்மையில் தனது பயணம் குறித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் பேசும்போது, விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் நடித்திருந்தேன். அப்படத்திற்கு கிடைத்த வெற்றி எனக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அப்போது எனக்கு படிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் சினிமா பக்கம் வரவில்லை.

இப்போது மலையாள படங்களில் நடித்து வருகிறேன். தமிழில் வாய்ப்புகள் கிடைப்பது இல்லை, அந்த நேரத்தில் விஜய்யை சந்திக்க முயற்சி செய்தேன். அவரது செக்யூரிட்டியிடம் நான் விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் நடித்தவர் என்று கூறியபோது, அவர் பீஸ்ட் விஜய் இப்போது என்றார்கள்.

நான் அதற்கு பிறகு விஜய்யை சந்திப்பது கடினம் என நினைத்தேன். வருங்காலத்தில் கண்டிப்பாக நான் விஜய்யை சந்திப்பேன், தமிழில் படங்கள் நடிப்பேன் என கூறியுள்ளார்.

https://www.youtube.com/embed/9JOK7RzxYes
  • சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement