நடிகர் கார்த்தி நீண்ட நாட்களுக்கு பின்னர் கிராமத்து கெட்டப்பில் நடித்துள்ள படம் விருமன். இந்தப் படம் வரும் 12ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில், படத்தின் டீசர், ட்ரெயிலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளன. இந்தப் படத்தில் கார்த்தி மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் எனவும் கூறப்படுகின்றது.
கார்த்திக்கு ஜோடியாகியுள்ளார் பிரபல இயக்குநர் ஷங்கரின் மகள் அதீதி ஷங்கர். இவரது நடிப்பும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. முதல் படத்திலேயே இமேஜ் குறித்தெல்லாம் கவலைக்கொள்ளாமல் பக்காவான கிராமத்து பெண்ணாக அவர் களமிறங்கியுள்ளார்.
மேலும் இந்தப் படத்தின் மூலம் கார்த்தியை இரண்டாவது முறையாக இயக்கியுள்ளார் பிரபல இயக்குநர் முத்தையா. மேலும் இந்தக் கூட்டணி முன்னதாக கொம்பன் படத்தில் இணைந்திருந்தது. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாகியிருந்தார் லக்ஷ்மி மேனன். ராஜ்கிரண் லஷ்மி மேனனின் அப்பாவாக முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.
விருமன் படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய அதீதி ஷங்கர், படப்பிடிப்பில் நிகழ்ச்சி சுவாரஸ்யங்கள் குறித்து பகிர்ந்துக் கொண்டார். தான் இந்தப் படத்தில் ட்ரை சைக்கிள் ஓட்டியதாகவும் கோலம் போட்டதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய சூரி, அதீதி தன்மீது தண்ணீர் கேனை 8 முறை வீசியதால் தனக்கு வலி ஏற்பட்டதாகவும் தொடர்ந்து செத்துப் போயிடுவேன் என்று சொல்லி தான் தப்பியதாகவும் குறிப்பிட்டார்.அத்தோடு தன்னை முதல் முறை பார்த்தபோதே அவர் நீண்ட நாட்கள் பழகியது போல தன்னிடம் பேசியதாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சீரியசான காட்சியின் சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், தன்னிடம் வந்து, சூரி சார், சனிக்கிழமைக்கு பிறகு ஏன் ஞாயிற்றுக் கிழமை வருகிறது என்று கேட்பார் என்றும் இதற்கான விடையை தான் சீரியசாக யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதீதி, ஏன்னா அடுத்தநாள் திங்கட்கிழமை வருவதால்தான் ஞாயிற்றுக்கிழமை வருவதாக முடிப்பார் என்றும் சூரி கூறியுள்ளார்.
விருமன் படத்தை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரித்துள்ளது. கடந்த சில தினங்களாக இந்தப் படத்தின் பிரமோஷன்கள் மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன.மேலும் இதில் கார்த்தி, அதீதி உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டு கலக்கி வருகின்றனர்.
பிற செய்திகள்
- விஜய் மாஸாக சண்டை போடும் காட்சி-வாரிசு படத்திலிருந்து கசிந்த வீடியோ..!
- நடிகை சீமாவின் மகளா இது.? இத்தனை ஆண்டுகளாக இது தெரியாம போச்சே..குடும்பத்தோடு வைரலாகும் புகைப்படம்..!
- குட்டை கவுனில் ரசிகர்களை கிறங்கடிக்கும் டாப்ஸி…வைரலாகும் ஹொட் போட்டோஸ்..!
- திடீரென வந்த ஆபாச கமன்ட் -கடும் கோபத்தில் சுனிதா என்ன செய்துள்ளார் தெரியுமா..? வைரலாகும் பதிவு..!
- மேலாடை அணியாமல் மொத்தத்தையும் காட்டினா எப்படி… நடிகை ஆதா ஷர்மா வெளியிட்ட புகைப்படத்தால்-ஷாக்கான ரசிகர்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!