• Nov 19 2024

கண்டிப்பா லவ் மேரேஜ் தான் பண்ணிப்பேன்- திருமணம் குறித்து ஓபனாகப் பேசிய ரம்யா பாண்டியன்- அதுவும் யாரைத் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

மொட்டை மாடி போட்டோ ஷுட மூலம் பிரபல்யமானவர் தான் ரம்யா பாண்டியன். இதனைத் தொடர்ந்து ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கின்றார்.இருப்பினும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இதன் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உருவானது.

இதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர்  தாராளமாக கிளாமர் காட்டவும் தொடங்கி இருக்கிறார். அவரது கிளாமர் போட்டோக்கள் இணையத்தில் தொடர்ந்து வைரல் ஆகின்றன.


இந்நிலையில் தற்போது ரம்யா பாண்டியன் அளித்திருக்கும் பேட்டியில் திருமணம் பற்றி பேசி இருக்கிறார். "நான் நிச்சயம் காதல் திருமணம் தான் செய்வேன்" என கூறி இருக்கிறார்.


"இப்போது என் வாழ்க்கையில் யாரும் இல்லை. நான் சிங்கிள் தான். ஒருவரை எனக்கு பிடிக்க வேண்டும் என்றால் அவரது personality வைத்து தான் பிடிக்கும். மேலும் அவர் கண் எனக்கு பிடிக்க வேண்டும்" என ரம்யா பாண்டியன் கூறி இருக்கிறார். இதனால் சீக்கிரமே குட் நியூஸ் சொல்லுங்க மேடம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement