தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் சதா. இதனைத் தொடர்ந்து தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான “ஜெயம்” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு ரசிகர்களின் ஆதரவையும் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான அந்நியன், திரைப்படத்தில் நடித்தார். பின்பு திருப்பதி, உன்னாலே உன்னாலே ஆகிய படங்களில் நடித்தார். இந்த படங்களும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சதாவிற்கு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியது.
தமிழைத் தவிர கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், 37 வயதாகும் சதா இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இதனையடுத்து திருமண ரகசியம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில் கூறியதாவது
” நான் தற்போது வரை திருமணத்தை பற்றி யோசிக்கவில்லை. திருமணம் பற்றிய சிந்தனைகளும் என் மனதில் இல்லை. எனக்கு சரியான பொருத்தமான நபரை நான் இன்னும் பார்க்கவில்லை. ஒருவேளை அந்த நபர் நான் பார்த்தால் உடனடியாக அவரை திருமணம் செய்து கொள்வேன்” என தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
Listen News!