தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் தான் பாவா லட்சுமணன் .இதுவரை சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில், காமெடி நடிகராக நடித்துள்ள இவர், தற்போது ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சர்க்கரை வியாதிக்காக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.
காலில் ஏற்பட்ட காயத்தை மருந்துகள் மூலம் சரி செய்ய, மருத்துவர்கள் பல்வேறு முயற்சிகள் எடுத்த போதிலும், முடியாமல் போகவே, வேறு வழியின்றி அவருடைய ஒரு காலில் கட்டை விரல் மற்றும் அதற்கடுத்த இரண்டு விரல்கள் அகற்ற எடுக்கப்பட்டு விட்டது. இன்னொரு காலிலும் கட்டை விரல் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாராம்.
இந்நிலையில், பாவா லட்சுமணன் அண்மையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், தற்போது படவாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். கொரோனா காலத்தில் நான் இறந்து விட்டேன் என்று கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கூட ஓட்டினார்கள் என்றார். அந்த நேரத்தில் எனக்கு சாப்பாடு போட்டது விவேக், மயில்சாமி, மனோபாலா தான்.
மயில்சாமி அவர்கள் எனக்கு சுகர் மாத்திரை எல்லாம் வாங்கி கொடுத்தார். ஷூட்டிங் இல்லாத நேரத்தில் மயில்சாமிக்கு போன் பண்ணாபோதும், கவரில் பணத்தை வைத்து கொடுத்துவிடுவார். இப்போது அவர்கள் இல்லாததால், மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் அவதிப்பட்டுக்கொண்டு இருக்கிறேன் என்று கண்ணீருடன் பேட்டி கொடுத்திருந்தார்.
இந்த பேட்டியை பார்த்த பல நடிகர்கள் அவருக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளனர். அந்த வகையில் விஜய் டிவி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலா, பாவா லட்சுமணனை மருத்துவமனையல் நேரில் சந்தித்து ரூ.30 ஆயிரம் பணத்தை கொடுத்து உதவி உள்ளார். மேலும்,சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பாவா லட்சுமணனிடம் சிறிது நேரம் மனம் விட்டு கலகலப்பாக பேசி உள்ளார்.
மேலும், அக்கவுண்ட்டில் மொத்தமே 32 ஆயிரம் தான் இருந்ததாகவும், அவற்றை மொத்தமாக எடுத்துக்கொண்டு 2 ஆயிரம் ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு உங்களை பார்க்க வந்தேன் அண்ணேன் என்று 30 ஆயிரத்தை கொடுத்து உதவி உள்ளார். பாலாவின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!