• Sep 20 2024

குளியறைக்குச் சென்று தனியாக அழுவேன்... ஒண்ணா.? ரெண்டா.? மனம் திறந்து பேசிய அதிதி..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 'சிங்காரம்' என்ற படத்தின் வாயிலாக அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ். இருப்பினும் இவர் மணிரத்னம் இயக்கிய 'காற்று வெளியிடை' என்ற படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானவர். அதனைத் தொடர்ந்து 'செக்க சிவந்த வானம், ஹேய் சினாமிகா' உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார். 


தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது இவர் பாலிவுட்டில் பிஸியான நடிகைகளில் ஒருவராக வலம் வருகின்றார். இந்நிலையில் சினிமா அனுபவங்கள் குறித்து அதிதிராவ் அளித்துள்ள பேட்டி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 


அப்பேட்டியில் அவர் கூறுகையில் ''எல்லாத் துறைகளிலும் நல்லது, கெட்டது இரண்டும் இருக்கும். சினிமாவிலும் அப்படித்தான். ஒரு படம் தோல்வி அடைந்தால் யாரும் சினிமாவை விட்டு போக மாட்டார்கள். வெற்றி கிடைக்கும் என்ற எண்ணத்துடன் முன்னேறுவார்கள். சிறு வயது முதலே நான் மணிரத்னம் படங்களை பார்ப்பேன். அவரால் தான் சினிமா மீது எனக்கு ஆசை பிறந்தது" எனக் கூறியிருக்கின்றார்.


மேலும் "சினிமாவில் பல அவமானங்களை நான் எதிர்கொண்டேன். ஒண்ணு இல்லை ரெண்டு இல்லை நிறைய கஷ்டங்களை சந்தித்திருக்கேன். அம்மா முன்பு அழுதால் வேதனைப்படுவார் என்பதற்காக குளியல் அறைக்கு சென்று அழுது தீர்ப்பேன். எனது இரண்டாவது படம் ரிலீசான பிறகு எனக்கு நல்ல பெயர் வந்தது. அந்த படம் பார்த்த மணிரத்னம் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்" எனவும் கூறியிருந்தார்.

அதுமட்டுமல்லாது "உனக்குள் ஏதோ மேஜிக் இருக்கிறது. திரையில் உன்னை பார்த்தால் உன் மேல் இருந்து பார்வையை திருப்பவே முடியாது" என்று அமிதாப் பச்சன் கூறியதை மறக்கவே முடியாது" எனவும் அப்பேட்டியில் தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement