• Nov 10 2024

என் ஆளை பார்க்கத் தான் டியூஷன் போவேன் கூத்தாடாத தெருவே இல்லை- தனுஷ் சொன்ன லவ் ஸ்டோரி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷூடன் நடிகை சம்யுக்தா மேனன்,சாய் குமார்,  பரணி, சமுத்திரக்கனி, தோட்டப்பள்ளி மது, நர்ரா ஸ்ரீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பேரடி, பிரவீணா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வாத்தி.

 கல்வித்துறையை அடிப்படையாக கொண்ட எடுக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பானது நிறைவடைந்து தற்பொழுது ரிலீஸிற்கு தயாராகியுள்ளது. இந்த நிலையில் அண்மையில் படத்தின் இசை வெளியீடு பிரமாண்டமாகவும் நடைபெற்றது. எனவே இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பல விடயங்கள் குறித்து பேசியிருந்தார்.


அதில் “இந்த திரைப்படம் 90களில் நடக்கிறது. இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் 90களில் நான் பள்ளி படித்துக் கொண்டிருந்தேன். ஆனால் இந்த திரைப்படத்தில் 90களில் நான் வாத்தியாராக இருக்கிறேன். அந்த வேலை மிகவும் ஈஸி என நினைத்தேன். ஆனால் நடிக்கும் போதுதான் அது எவ்வளவு கஷ்டம் என புரிந்தது. படிப்பது கஷ்டம் என்று நாம் சொல்வதை விட பாடம் எடுப்பதும், தன் பிள்ளைகள் நன்றாக படித்து ஆளாகி விட வேண்டும் என்று பெற்றோர் தவிப்பதும் அதைவிட பெரிய கஷ்டம் என்பதை புரிந்து கொண்டேன். ” என்றார்.


மேலும் ஒரு குட்டிக்கதை சொல்லத் தொடங்கிய தனுஷ், “பள்ளி படிப்பின்போது நான் டியூஷன் போனேன். அதற்கு காரணம் நான் படிப்பதற்கு அல்ல. என்னுடைய ஆள் டியூஷன் சென்று இருந்தார். அதற்காகதான்.. ஆனால் நான் அவங்களுக்காக வெளியில் காத்திருப்பது, அவங்களுக்கு தெரிய வேண்டும் என்பதால் பைக்கில் சென்று ஆக்ஸிலரேட்டரை திருகி உறுமல் சத்தத்தை ஏற்படுத்துவேன். ஒருநாள் அந்த ஆசிரியர் நீங்கள் எல்லாம் படித்து விடுவீர்கள், வெளியில் நின்று பைக்கை திருகி உறுமல் சத்தத்தை எழுப்புபவன் ஒருநாள் கூத்தாடியாக தான் தெருவில் நிற்பான் என்று கூறினார். அவர் எந்த நேரத்தில் சொன்னாரோ, இன்று நான் கூத்தாடாத தெருவே தமிழ்நாட்டில் இல்லை. நான் ராஜா மாதிரி இருக்கிறேன்.


ஆனால் இன்றுவரை நாம் ஏன் வெளியே சுற்றிக் கொண்டிருந்தோம், நாம் ஏன் உள்ளே அமரவில்லை என்று நான் வருத்தப்பட்டு கொண்டுதான் இருக்கிறேன்.‌நான் ஏற்கனவே சொன்னதுதான்.. நம்மிடம் காடு இருந்தால் எடுத்துக் கொள்வார்கள், ரூபாய் இருந்தால் பிடுங்கி கொள்வார்கள், படிப்பு மட்டும் தான் நம் சொத்து எடுத்துக் கொள்ளவே முடியாது. எண்ணம் போல் வாழ்க்கை உங்களுடைய எண்ணத்தை படிப்பில் வையுங்கள், அது உங்களுக்கு வாழ்க்கையாகும்” என்ன பேசினார்.


Advertisement

Advertisement