• Nov 17 2024

திருமணம் செய்யாமலேயே குழந்தை பெற்றுக் கொள்வேன்- தொழிலில் கிடைக்கும் மகிழ்ச்சியே போதும்- திமிராகப் பேசிய அஜித் பட நடிகை

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை தபு. இவர் தமிழிலும் சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றேன்.அந்த வகையில் தமிழில் காதல் தேசம், இருவர், தாயின் மணிக்கொடி, கண்டு கொண்டேன் கண்டு கொண்டே, சினேகிதியே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இது தவிர ஹிந்தியிலும் நடித்த இவருக்கு 50 வயது ஆகின்றது.இதனால் கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார்.இவர் திரைப்படங்களில் நடித்து வந்தாலும் இன்னும் திருமண பந்தத்தில் இணையவில்லை என்பதும் முக்கியமாகும்.


இந்த நிலையில் இவர் சமீபத்தில்  அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:- எனக்கு எல்லோரையும் போல தாயாக வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதற்கு திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. திருமணம் ஆகாமலே கர்ப்பம் ஆகலாம் . வாடகைத் தாய் (சரகோசி) மூலமாகவும் தாயாகும் வாய்ப்பு உள்ளது. 

எனக்கு தாயாக வேண்டும் என தோன்றினால் அந்த முறையை நான் கடைபிடிப்பேன்.என்னை யாராலும் தடுக்க முடியாது. திருமணம் ஆகாவிட்டால் செத்துப் போக மாட்டோம். திருமணம் அவசியம் இல்லை. தற்போது எனது நடிப்பு தொழிலில் கிடைக்கும் மகிழ்ச்சியை அனுபவித்து வருகிறேன். காதலுக்கும் திருமணத்துக்கும் வயதுக்கு சம்பந்தம் இல்லை. திருமணத்திற்கும் குழந்தைகளை பெற்றுக் கொள்வதற்கும் வயது சம்பந்தமில்லை. இந்த காலத்தில் எதற்கும் வயது ஒரு தடையல்ல'' என்றார். தபுவின் கருத்து வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement