• Sep 20 2024

நான் அந்த நடிகையின் கால்களைப் பிடிக்க மாட்டேன்-மறுப்புக் கூறிய ரஜினிகாந்த்- இது தான் காரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த படம் ஓரளவு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இருந்தாலும் வசூலில் அள்ளிக் குவித்தது.

இதனை தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் தனது 169வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கவுள்ளார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் ரஜினிகாந்தின் நடிப்பில் கடந்த 1989ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சிவா. இப்படத்தில் ரகுவரன், ஷோபனா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில் நடிகை ஷோபனாவின் கால்களை ரஜினிகாந்த் பிடிக்கவேண்டுமாம். ஆனால், 'நான் ஷோபனாவின் கால்களை பிடிக்கும் காட்சியில் நடிக்க மாட்டேன், எனது ரசிகர்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்' என்று ரஜினிகாந்த் மறுத்துவிட்டாராம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement