ஒரு துணை இயக்குநராக தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்து, பின்னர் 'புரியாத புதிர்' படத்தின் சிறு கதாபாத்திரத்திலும் நடித்து ஒரு நடிகராகவும் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டவர் சேரன்.இதை தொடர்ந்து 1997 ஆம் ஆண்டு, நடிகர் பார்த்திபன் - மீனா நடித்த, 'பாரதி கண்ணம்மா' படத்தை இயக்கி, முதல் படத்திலேயே தன்னுடைய வெற்றியை உறுதி செய்தார்.
தொடர்ந்து 'பாண்டவர் பூமி', 'ஆட்டோகிராப்', 'தவமாய் தவமிருந்து' போன்ற படங்களை இயக்கியது மட்டும் இன்றி, ஹீரோவாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.ஆட்டோகிராப்' படத்திற்கு பின் இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு விளையாடினார்.
அங்கு லாஸ்லியா - சேரனுக்கு இடையே இருந்த அப்பா மகள் உறவு பார்பவர்களையே நெகிழ வைத்தது. தற்போது திரைப்படங்கள் இயக்காமல் 'ராஜாவுக்கு செக்' மற்றும் 'ஆனந்தம் விளையாடும் வீடு' போன்ற படங்களில் நடித்திருந்தார்.இந்நிலையில் சேரன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது அவரிடம் விஜய் சேதுபதி பற்றி கேட்டிருக்கிறார்கள்.
அதற்கு அவர் கோபமாகப் பதில் சொல்லியுள்ளார். அதாவது "பண்ணல அந்த படம் பண்ண முடியாது இனிமே. நிறைய காரணங்கள் இருக்கு. அவர் ரொம்ப உயர்ந்துவிட்டார். அவருக்காக கதை மாற்றப்படவேண்டும்."
"மேலும் அவர் ரொம்ப பிசியாக இருக்கிறார். கண்டிப்பாக இன்னும் 10 வருஷத்துக்கு அவரது டேட் கிடைக்காது. அதனால் இப்போதைக்கு அந்த படம் எடுக்க வாய்ப்பில்லை" என சேரன் கூறி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!