உலகின் மிகவும் அதிகளவான ரசிகர்கள் கூட்டத்தை கொண்ட ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று 'பிக்பாஸ்'. கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் விஜய் டீவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியானது இதுவரை 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ள நிலையில், விரைவில் இதன் 6-ஆவது சீசன் தொடங்க இருக்கின்றது.
இந்நிலையில் தொடர்ந்து பிக்பாஸ் சீசனில் கலந்து கொள்ளவுள்ள நட்சத்திரங்கள் குறித்து தகவல்கள் வெளியாகி கொண்டு உள்ளன. அதன்படி இரண்டு முக்கிய நட்சத்திரங்கள் குறித்த பெயர்கள் தான் அடிப்பட்டு இருக்கிறது.
ஆம், பிக்பாஸ் சீசன் மதுரை முத்துவை கலந்து கொள்ள அணுகியிருப்பதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அவர் கேட்ட சம்பளத்தை தர சேனல் சம்மதிதுள்ளதால் கலந்து கொள்ளலாமென மதுரை முத்துவும் முடிவு எடுத்திருந்தாராம்.
இதனிடையே யூடியூப் பிரபலம் ஜி.பி.முத்துவும் பிக்பாஸ் கலந்து கொள்ள சம்மதிக்க வைத்துள்ளது மதுரை முத்துக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ள மாட்டேன் என முதுரை முத்து கூறிவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
Listen News!