• Sep 21 2024

நடுராத்திரியில் அந்த மாதிரி படங்களை பார்க்கமாட்டேன்- இயக்குநர் மிஷ்கின்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை மக்களுக்கு கொடுப்பதில் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் மிஷ்கின். மேலும் இவரது இயக்கத்தில் வெளியான ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சைக்கோ, பிசாசு ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் இப்படி தமிழ் சினிமாவில் பல திகில் படங்களை கொடுத்த மிஷ்கின் தான் பார்க்கும் படங்கள் பற்றி சமீபத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது ” நான் இரவு நேரங்களில் இன்னமும் பேய்ப் படங்களை பார்க்க மாட்டேன். எனக்கு ரொம்ப பயமா இருக்கும். நான் 5 வயசு குழந்தைங்க. கொலைகள் அதிகம் இடம்பெறும் படங்கள் பார்க்க மாட்டேன்.

ஒரு வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு படங்கள் மட்டுமே தான் பார்ப்பேன். அத்தோடு இயக்குநர் ஆகுறதுக்கு முன்னாடி, ஒரு குழந்தை மாதிரி பல படங்கள் பார்த்திருக்கேன். ஆனா, இப்ப தடுக்குது. நான் பார்க்கும் எந்த ஒரு படத்துலேயும் முதல் பத்து ஷாட்டை கவனிப்பேன்.

மேலும் அந்த பத்து ஷாட்ல ஒரு டைரக்‌ஷன், நரேட்டிவ் இருக்கும். அந்த பத்து ஷாட் எனக்கு பிடிக்கல, புரியலைனா என் மூக்குக்கண்ணாடியை போட்டுட்டு தூங்க ஆரம்பிச்சிடுவேன்.

நான் ஒரு நார்மலான ஆடியன்ஸா என்னால ஆகமுடியலையேனு ரொம்ப வருத்தப்படுறேன். மேலும் அதனாலதான் கிளாசிக்ஸ் படங்களை பார்க்கறேன். செவன் சாமுராய் ,காந்தி,போன்ற படங்கள் நான் இயக்குநர் என்பதையே மறக்கடிச்சிடும் படங்கள். அத்தோடு அந்த மாதிரி படங்கள் பார்க்கப் எனக்கு மிகவும் பிடிக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ரிலீஸ் தேதி கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement