• Nov 15 2024

'அனிரூத்தை மட்டும் தான் திருமணம் செய்து கொள்வேன்'- வெளிப்படையாகக் கூறிய பிரபல பாடகி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிரூத். இவர் தற்போது அனைத்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கும் இசையமைத்து வரும் பிஸியான இசையமைப்பாளராகக் காணப்படுகின்றார்.

ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கவர்ந்த இவர் இறுதியாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியிருந்த விக்ரம் படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படப்பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்று வருகின்றது.

இதை தொடர்ந்து தனுஷின் திருச்சிற்றம்பலம், அஜித்தின் Ak 62, ரஜினியின் தலைவர் 169 என பல படங்களுக்கு இசையமைக்கவுள்ளார்.சமீபகாலாமாக அனிருத்தின் திருமணம் குறித்து பல செய்திகள் இணையத்தில் வெளிவந்துகொண்டே இருக்கிறது.

இந்நிலையில், இளம் பின்னணி பாடகியான ஜோனிடா காந்தியிடம், சமீபத்தில் நிகழ்வு ஒன்றில் விளையாட்டாக திருமணம் குறித்து கேள்வி கேட்டப்பட்டுள்ளது.

சூர்யா, ரன்வீர் சிங், அல்லது அனிருத் இந்த மூவரில் யாரை திருமணம் செய்துகொள்வீர்கள் என்று கேட்டதற்கு, " இந்த மூவரில் அனிருத்துக்கு மட்டும் தான், இதுவரை திருமணம் நடக்கவில்லை. அந்த காரணத்தினால் மட்டும், நான் அவரை திருமணம் செய்து கொள்வேன் என்று பதிலளிக்கிறேன் " என கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement