தமிழ் சின்னத்திரையில் அதிகமான இளம் ரசிகர்கள் விரும்பிப் பார்க்கப்படும் தொலைக்காட்சியாக விஜய்டிவி காணப்படுகின்றது. இதில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வந்தவர்கள் தற்பொழுது நடிகர், நடிகைகளாக அறிமுகமாகியுள்ளார்கள்.
அவ்வாறு விஜய்டிவியில் இருந்து வெள்ளித்திரைக்கு நுழைந்தவர்கள் தான் சிவகார்த்திகேயன், ப்ரியா பவானி சங்கர், புகழ் ,ரோபோ சங்கர், தீனா எனப் பலர் காணப்படுகின்றனர்.
அந்த வகையில் விஜய் டிவியில் சூப்பர்ஹிட்டாக ஒளிபரப்பாகும் சீரியலான நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 சீரியலில் கதாநாயகனின் தங்கையாக நடித்து வரும் நடிகை காயத்ரி தனது வெள்ளித்திரை அறிமுகம் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவரிடம் சினிமாவில் எப்போது நுழைவீர்கள் என்று கேட்டபோது, ' சினிமாவில் நடித்தால் விஜய்க்கு தங்கையாக தான் நடிப்பேன் ' என்று அனைவருக்கும் சர்ப்ரைஸ் தரும் வகையில் பதில் ஒன்றை கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!