தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் விஜய். இவர் நேற்றைய தினம் தான் லியோ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்தார் என்பதை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இதனை அடுத்து தற்பொழுது மாவட்ட வாரியாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து பனையூரில் ஆலோசனை நடத்தியுள்ளார்.
நடிகர் விஜய்யுடனான சந்திப்புக்கு பின்னர் பேட்டியளித்த ரசிகர்கள், நடிகர் விஜய்யிடம் அரசியலுக்கு வர சொல்லி நாங்கள் கூறும் போதெல்லாம் சிரிச்சு கொண்டே தலையாட்டுவார். விஜய் மக்கள் இயக்கத்திற்கான வார்டு மெம்பர் கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளோம். இதனை முத்துவிட்டு நடிகர் விஜய்யை சந்தித்தோம்.
அவர் அனைவரையும் பாராட்டினார்.அவரின் அரசியல் வருகைக்கான எல்லா ஏற்பாடுகளையும் கட்டமைப்புகளையும் செய்துவிட்டோம். அவர் கைகாட்டியதும் அரசியலில் ஈடுபடுவோம். அவர் எப்போது அரசியலுக்கு வந்தாலும் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம். அரசியலில் இறங்குவது என்றால் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும், முழுமையாக அரசியலில் மட்டுமே ஈடுபடுவேன் என்று எங்களிடம் தெரிவித்துள்ளார்.
அரசியலை பொறுத்தவரை எங்களுக்கு அஜித், ரஜினிகாந்த் ரசிகர்கள் என அனைவரின் ஆதரவும் எங்களுக்கு உள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளனர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்.மேலும் விஜய் காரில் இருந்து இறங்கி அலுவலகத்திற்குச் சென்ற வீடியோ தற்பொழுதும் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!