• Nov 14 2024

பூ பழம் விற்பேன், ஆனால் சாராயம் விற்கமாட்டேன்- சினிமாவைப் பற்றி வெளிப்படையாகக் கூறிய ராஜ் கிரண்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 25 ஆண்டகளுக்கு மேலாக முன்னணி நடிகராக வலம் வருபவர் ராஜ் கிரண். இவர் ஹீரோவாகவும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இது தவிர சமீபகாலமாக கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் இவரை சிவாஜி திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க ஷங்கர் அழைத்தாராம். ஆனால் ரஜினிகாந்திற்கு என்னைப் பற்றி ஏற்கனவே நன்கு தெரியும். நான் நெகட்டிவ் கேரக்டர் பண்ணமாட்டேன் என ஷங்கரிடம் கூறியிருக்கிறார். ஆனால் ஷங்கரோ அவர் தான் அக்கதாப்பாத்திற்குப் பொருத்தமாக இருப்பார். நான் எதற்கும் கேட்டுப் பார்க்கிறேன் என்று கேட்டாராம்.

ஆனால் நான் அந்தக் கேரக்டரில் நடிக்க மறுத்துவிட்டாராம். 1989-ம் ஆண்டு 'என்ன பெத்த ராசா' திரைப்படத்தின் மூலம் நடிகராகக் களமிறங்கிய ராஜ்கிரண் தற்போது நடப்பு ஆண்டு 2022 வரை மொத்தம் 33 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். ஆனால் மிகக் குறைந்த படங்களை அவர் செய்திருந்தாலும் கூட அவரது கதாப்பாத்திரங்கள் இப்போது வரை பேசப்படுகின்ற கதாப்பாத்திரங்களாக இருக்கின்றன.

இந்த நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ராஜ் கிரண் சினிமா என்பது வெகுஜன ஊடகம். அந்த ஊடகம் வாயிலாக நல்லதையும் காட்டலாம். கெட்டதையும் காட்டலாம். நான் அதில் கற்பூரம் விற்பேன், சந்தனம் விற்பேன், பூ பழம் விற்பேன், ஆனால் சாராயம் விற்கமாட்டேன். காரணம், சினிமா போன்ற வெகுஜன ஊடகத்தில் இறைவன் என்னை வைத்திருக்கிறான். அதற்கு நான் நன்றியோடு, அதில் நல்லதை மட்டுமே செய்ய வேண்டும் என தெரிவித்திருக்கின்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement