• Sep 20 2024

'இந்த நடிகையைப் போல நானும் ஜெயித்துக் காட்டுவேன்'- மனம் திறந்த பூஜா ஹெக்டே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை தான் பூஜா ஹெக்டே. இவர் மிஷ்மின் இயக்கத்தில் ஜுவா நடிப்பில் வெளியான முகமூடி என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தமிழில் வாய்ப்புக்கள் கிடைக்காததால் ஹிந்தியில் அறிமுகமானார்.

ஹிந்தியில் ஸ்டார் நடிகரான ரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக மொகஞ்சதாரோ திரைப்படத்தில் நடித்தார். பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் தோல்வியை தமிழுவியதால் ராசியில்லாத நடிகை என பாலிவுட்காரர்களால் ஓரம் கட்டப்பட்டார்.

தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான, மஹரிஷி, ஆல வைகுந்தப்புராமுலு உள்ளிட்ட படங்கள் மார்க்கெட்டின் உச்சத்தில் அமர வைத்தது. அதையடுத்து தற்போது தமிழில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து ஆச்சார்யா படத்தில் நடித்துள்ள இவர், கபி எனட் கபில் திவாலி , சிர்குஸ் ஆகிய ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார். இந் நிலையில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் போல் ஹிந்தியில் ஜெயிப்பேன் எனத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement