• Sep 20 2024

200 கோடி கொடுத்தாலும் விளம்பரத்தில் நடிக்க மாட்டேன்- ரஜினியின் முடிவுக்கு என்ன காரணம் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் இன்றைய தினம் தனது 72வது பிறந்தநாளைக் கெதண்டாடி வருகின்றார். இவருக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இவருக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் மட்டுமல்லாது ரசிகர்களும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.இது தவிர ரஜினி குறித்த சுவாரஸியமான விடயங்களும் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் ரஜினி குறித்த சுவாரஸியமாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.


அதாவது சினிமா பிரபலங்களுக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி, பல்வேறு கார்ப்ரேட் நிறுவனங்கள் அவர்களை தங்கள் கம்பெனி விளம்பரங்களில் நடிக்க வைத்து வருகின்றனர். இதற்காக அந்த நடிகர்களுக்கு கோடி கோடியாய் சம்பளமும் வழங்கி வருகின்றனர். 

ஆனால்   ரஜினிகாந்த் இதுவரை விளம்பரத்தில் நடித்து பெரும்பாலும் யாரும் பார்த்ததில்லை. இவரும் ஆரம்ப காலகட்டத்தில் பாம் கோலா என்கிற குளிர்பான விளம்பரத்தில் மட்டும் நடித்தார். அதேபோல் அரசின் விழிப்புணர்வு விளம்பரங்களில் நடித்துள்ளார். அதுவும் சம்பளமே வாங்காமால் நடித்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.

ஆரம்ப காலகட்டத்தில் நடித்த ஒரே ஒரு குளிர்பான விளம்பரத்தை தவிர்த்து ரஜினி வேறு எந்த விளம்பரங்களிலும் தலைகாட்டியதே இல்லை. அவர் நினைத்தால் விளம்பரங்கள் மூலமே கோடி கோடியாய் சம்பாதிக்கலாம். ஆனால் தன்னால் எந்த விஷயமும் மக்களுக்கு தவறாக புரமோட் ஆகிவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு விளம்பரங்களில் நடிக்கவே கூடாது என்பதை ஒரு கொள்கையாக கடைபிடித்து வருகிறாராம்.


இதுவரை ரஜினியை தங்களது விளம்பரங்களில் நடிக்கச் சொல்லி அணுகிய நிறுவனங்களில் பிரபல கார் நிறுவனமான பி.எம்.டபிள்யூ-வும் ஒன்று. தங்கள் நிறுவனத்திற்காக நடிக்க ரஜினிக்கு ரூ.200 கோடி வரை கொடுக்க அந்நிறுவனம் தயாராக இருந்ததாம். ஆனால் பணத்தை ஒரு பொருட்டாக கருதாத ரஜினி நோ சொல்லிவிட்டாராம். அதேபோல் பிரபல துணிக்கடை அதிபர் ஒருவர் தன் கடை விளம்பரத்தில் நடிக்க மூன்று நாளைக்கு ரூ.30 கோடி வரை தருவதாக கூறியும் தன்னுடைய டிரேட் மார்க் சிரிப்போடு மறுப்பு தெரிவித்தாராம் ரஜினி. இதுபோன்ற குணங்கள் தான் இவரை மக்கள் மத்தியில் சூப்பர்ஸ்டாராக நீங்கா இடம்பிடிக்க செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement