• Sep 20 2024

சீரியல் பக்கம் இனிமேல் திரும்பிக் கூட பார்க்க மாட்டேன்- அதிர்ச்சித் தகவலைக் கூறிய ப்ரஜன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவி சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் மிகப்பெரிய அளவில் பாப்புலர் ஆனவர் ப்ரஜின். இவர் பிக்பாஸ் பாவனியுடன் இணைந்த நடித்த சின்னத்தம்பி சீரியல் இவருக்கு சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது.இந்த வருடங்கள் 5 வருடங்கள் ஓடியது.

இதனைத் தொடர்ந்து அன்புடன் குஷி என்னும் சீரியலில் நடித்திருந்தார்.அதன் பின் பிரஜின் நடித்த வைதேகி காத்திருந்தால் தொடரில் இருந்து திடீரென நீக்கப்பட்டார். சில நாட்களில் சீரியலும் முடிக்கப்பட்டது.இந்நிலையில் தற்போது லைவ் வீடியோவில் பேசிய பிரஜின் தான் இனி சீரியல்களில் நடிக்க மாட்டேன் என கூறி இருக்கிறார்.

அவர் தற்போது 7 படங்கள் கைவசம் வைத்து இருக்கிறாராம், அதனால் இனி சினிமாவில் மட்டுமே நடிப்பேன், சீரியல்களுக்கு மீண்டும் வரும் திட்டம் இல்லை என கூறி இருக்கிறார்.

மேலும் அவரது மனைவி சாண்ட்ராவும் இப்போது இரட்டை குழந்தைகளை கவனிப்பதில் தான் பிசியாக இருக்கிறார். அதனால் அவரும் தற்போதைக்கு சீரியல்களில் ரீ என்ட்ரி கொடுக்க வாய்ப்பில்லை என கூறி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement