தென்னிந்திய சின்னத்திரையில் ரசிகர்கள் அதிகம் விரும்பிப்பார்க்கும் ரியாலிட்ரி ஷோவாக இருப்பது பிக்பாஸ் ஆகும்.இது தமிழ் ,தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ,கன்னடம் ஆகிய மொழிகளில் நடைபெற்று வருகின்றது. தெலுங்கு பிக்பாஸ் சீசன் 6 அண்மையில் ஆரம்பித்தது.
அதே போல தமிழில் அக்டோபர் மாதம் 9ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.ஹிந்தியில் 16வது சீசன் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.இந்த நிகழ்ச்சியை சல்மான்கான் தான் தொகுத்து வழங்கி வருகின்றார். இந்நிலையில் பிக்பாஸ் ஷோவை தொகுத்து வழங்க சல்மான்கான் 1000 கோடி சம்பளம் கேட்டதாக ஒரு செய்தி பரவியது.
ஒவ்வொரு சீசனிலும் அவரது சம்பளம் அதிகரித்ததாகவும் கடந்த சீசனில் ரூபாய் 350 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலக சல்மான்கான் முடிவு எடுத்ததால் ஆயிரம் கோடி சம்பளம் கொடுக்க பிக் பாஸ் நிறுவனம் முடிவை எடுத்துள்ளதாக ஒரு கருத்து பரவியது.
இது குறித்து சமீபத்தில் பேட்டியளித்த சல்மான்..ஆயிரம் கோடி சம்பளம் கொடுத்தால் நான் வேலைக்கே போக மாட்டேன் என கூறியுள்ளார். 56 வயதான நடிகர் தான் சட்டத்தின் கீழ் செயல்படுவதாகவும் இவ்வளவு சம்பாதிக்கும் போது தனது வழக்கறிகளுக்கு பணம் செலுத்த அதிக தொகை தேவைப்பட்டதாகவும், ஒருவேளை நான் அந்த சம்பளத்தை பெற்றால் டாக்ஸ் கட்ட வேண்டி இருக்கும் எனது வழக்கறிஞர்களுக்கும் கொடுக்க வேண்டி இருக்கும் என அந்த வதந்தியை மறுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!