• Sep 21 2024

அண்ணன் மனசு கஷ்டப்பட நான் விடமாட்டேன்- கூல் சுரேஷை கோர்த்துவிடப் பார்க்கும் விஷ்ணு- பிக்பாஸ் unseen promo

stella / 11 months ago

Advertisement

Listen News!


தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் கடந்த 7-ஆண்டுகளாகத் தொடர்ந்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அந்தவகையில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பல துறை சார்ந்து தேர்வு செய்யப்பட்டு ஆட்டம், பாட்டத்துடன் ஆரம்பமாகி இருக்கின்றது. அத்தோடு சண்டை, சச்சரவுகளும் இடம்பெற தொடங்கி விட்டன.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான அன்சீன்  ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.அதில் விஷ்ணு  கூல் சுரேஷைப் பார்த்து அண்ணன் மனசு புண்பட்டால் எனக்கு கஷ்டமாக இருக்கும் இதைக் கேட்கணும் என்று சொல்கின்றார். அதைக் கேட்ட கூல் சுரேஷ் ஏதோ ஏத்தி விடுற மாதிரி இருக்கே என்று சொல்கின்றார்.


அப்போது வாங்க அண்ணா கேட்கலாம் என்று சரவணனும் விஷ்ணும் மணியும் இழுக்க கூல் சுரேஷ் என்னை ப்ராங் பண்ணுற மாதிரி இருக்கே என்று சொல்கின்றார்.இவர்கள் இப்படிப் பேசும் போது அடிக்கடி மாயாவைக் காட்டுகின்றது. இதனால் மாயாவிடம் தான் ஏதோ கேட்கணும் என்று விஷ்ணு சொல்கின்றார் என்பதும் தெரிகின்றது. 


Advertisement

Advertisement