• Sep 20 2024

சிம்பு தலை வணங்குகின்றேன் உன்னை ஒன்னும் பண்ண முடியாது- வித்தியாசமான டுவிட் போட்ட மனோபாலா- குஷியில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

வெந்து தணிந்ததது படத்தைப் பார்த்த மனோபாலா "சிம்பு, வெந்து தணிந்தது காடு ஒரு அற்புதமான படம்...தலை வணங்குகிறேன்... உன்னை ஒன்னும் பண்ண முடியாது...என பதிவிட்டு இருக்கின்றார்

செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி ( நேற்று) வெளியாகி ரசிகர்களிடையே பாசிடிவ் விமர்சனங்களைப் பெறுவது மட்டுமன்றி வசூலிலும் அள்ளிக் குவித்து வரும் திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு . இப்படத்தில் சிம்பு முத்து என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.


தென் மாவட்டத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளியாக மும்பைக்கு செல்லும் முத்து வீரனின் வாழ்க்கை சம்பவங்களே இப்படம் எடுத்துக் காட்டுகின்றது.இந்த படத்தில் சிம்புக்கு ஜோடியாக  நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். சிம்புவின் அம்மாவாக ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு சிவகார்த்திகேயன் உதயநிதி ஸ்டாலின் சூர்யா ஆகியோர் பாராட்டுத் தெரிவித்திருந்த நிலையில் நடிகர் மனோபாலாவும் இப்படத்தைப் பார்த்து டுவிட்டு ஒன்று போட்டுள்ளார்.அதில் சிம்பு, வெந்து தணிந்தது காடு ஒரு அற்புதமான படம்...தலை வணங்குகிறேன்... உன்னை ஒன்னும் பண்ண முடியாது..." என மனோபாலா பதிவிட்டுள்ளார். 


இந்த பதிவுக்கு நடிகர் சிம்பு, "மிக்க நன்றி அண்ணா" என டுவீட் செய்துள்ளார்.மேலும் இன்னும் பல பிரபலங்களும் ரசிகர்களும் சிம்புவுக்க தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement