• Sep 20 2024

அந்த டாஸ்க்ல பிரிச்சு மேஞ்சிருப்பேன் ஸ்போர்ட்ஸ் மேன் டா நானு-ராமிடம் அசீம் உடைத்த விஷயம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது.இந்த வாரம் முழுவதும் நீதிமன்றம் என்னும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.இதன் இறுதியில் ராபர்ட் மாஸ்டர் மற்றும் குயின்சி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் அடுத்தடுத்த வாரங்களில் சிறப்பாக டாஸ்க் ஆடுவது பற்றி அசீம் மற்றும் ராம் ஆகியோர் பேசுகின்றனர். முதலில் பேசும் ராம்,"ஃபேமிலி ரவுண்டு வர்றது வரைக்குமாவது இருக்கணும்" என குறிப்பிட தொடர்ந்து பேசும் அசீம், "நீ எல்லாம் இருப்பாய் ராம்" என்கிறார்.


இதனைத் தொடர்ந்து,"எனக்கு கான்ஃபிடெனஸ் இருக்கு. ஆனா அடுத்த 2, 3 வாரம் கொஞ்சம் நல்லா ஆடணும். ரொம்ப Crucial ஆன டைம். ஒழுங்கா கவனமா ஆடணும். டாஸ்க்ல எல்லாம் ஒழுங்கா அடிக்கணும். அதே மாதிரி நானும் சொல்றேன். Physical டாஸ்க் எல்லாம் வச்சாங்கன்னா நீ அமைதியா இருக்காத, Conveyor பெல்ட் மாதிரி" என ராம் அசீமிடம் சொன்னதும் அவரும் ஏதோ விளக்கம் கொடுக்க வர, தொடர்ந்து பேசும் ராம், "Violent ஆக ஆடணும்ன்னு சொல்லல. ஆனால், பலத்தை காமிக்க வேண்டிய இடத்தில் அதை காமிக்க வேண்டும்" என்றும் அறிவுறுத்துகிறார்.

செஞ்சே ஆகணும் என்று நான் நின்று இருந்தா அந்த டாஸ்க்ல (ஃபேக்டரி டாஸ்க்) பிரிச்சு மேஞ்சிருப்பேன். ஆனா, அப்படி ஆட நான் நினைக்கல. ஏன்னா, எல்லோரும் ரொம்ப வேதனைப்பட்டாங்க" என்கிறார் அசீம். "எல்லாருமே Physical முறையில ஆடும் போது நம்மள மட்டும் தப்பு சொல்ல கூடாது தானே. அந்த டாஸ்க்ல Beltல எல்லாருமே அடிதடி பண்ணாங்க, எல்லாருமே புடிச்சு இழுத்தாங்க" என ராம் கூறினார்.


இறுதியில் விளக்கும் அசீம், "ஏன் இப்படி பண்ணிணாங்க அப்படின்ற மாதிரி தோணுச்சு வேற ஒன்றும் இல்ல. நான் அடிப்படையா ஸ்போர்ட்ஸ் Play வேணும்ன்னு ஒன்று சொல்லி இருப்பேன்ல, ஸ்போர்ட்ஸ் மேன் டா நானு. நான் இதெல்லாம் விட்டுக் கொடுக்கவே மாட்டேன். ஆனா எனக்குன்னு ஒரு இது நான் வச்சிருக்கேன்" என்றும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement