லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் லியோ திரைப்படம் விஜய் கேரியரில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.அக்டோபர் 19ம் தேதி ஆயுத பூஜை ஸ்பெஷலாக வெளியாகவுள்ள இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் 2 மாதங்களாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து தற்போது சென்னையில் நடைபெற்று வரும் லியோ படப்பிடிப்பில், ஒரு பாடல் காட்சியை படமாக்கி வருகிறார்களாம். ஆதித்யா ராம் பிலிம் சிட்டியில் 2000 பேருடன் விஜய் டான்ஸ் ஆடும் பிரம்மாண்டமான பாடல் காட்சியை ஷூட் செய்து வருகிறார் லோகேஷ். இந்தப் பாடலுக்கு விஜய்யின் ஃபேவரைட் டான்ஸ் மாஸ்டர் தினேஷ்குமார் கோரியோகிராபி செய்து வருகிறார்.
இந்த நிலையில் இப்படத்திலிருந்து சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது ஜோர்த்தாலே பாடல், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அசல் கோளாறு, இந்தப் பாடலை எழுதியுள்ளாராம். அதேபோல், அவரும் அனிரூத்தும் இணைந்து பாடியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேநேரம் ரசிகர்களுக்காக விஜய் குரலில் இந்தப் பாடலை ரெக்கார்ட் செய்யலாம் என லோகேஷ் & டீம் முடிவு செய்துள்ளதாம். மாஸ்டர் படத்திலும் விஜய் பாடிய பாடலுக்கு நல்ல ரீச் இருந்தது. அதனால் லியோவில் விஜய் குரலில் ஒரு பாடல் இருந்தால் நன்றாக இருக்கும் என படக்குழு முடிவு செய்துள்ளது. ஆனால், ஏற்கனவே அனிரூத், அசல் கோளாறு பாடிய வெர்ஷனை வைத்து தான் லியோ ஃபர்ஸ்ட் சிங்கிள் ஷூட்டிங் நடைபெற்று வருகிறதாம்.
அதனால், விரைவில் விஜய்யும் இந்தப் பாடலை பாடவுள்ளதாகவும், அவரது குரலிலேயே லியோ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்க்காக அனிரூத் இதைகூட விட்டுக்கொடுக்க மாட்டாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதனால் லியோ ஃபர்ஸ்ட் சிங்கிள் சூப்பராக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Listen News!