• Sep 20 2024

இரண்டு அழகு தேவதைகளுடன் இடியட் நானும்- baakiyalakshmi கோபி வெளியிட்ட போட்டோ- இவங்க ரெண்டு பேருடனும் சேர்ந்திட்டாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவரும் தொடர்களில் ஒன்றாக உள்ளது. இந்த சீரியல் டி.ஆர்.பியிலும் மன்னணி வகிக்கின்றது.இந்தத் தொடரின் கோபி -பாக்கியா மற்றும் ராதிகா கேரக்டர்கள் லீட் கேரக்டர்களாக ரசிகர்களை கவர்ந்து வருகின்றன

 கோபியாக சதீஷ், பாக்கியாவாக சுசித்ரா மற்றும் ராதிகாவாக ரேஷ்மா பசுபுலேட்டி ஆகியோர் நடித்து வருகின்றனர். இவர்களை மையமாக கொண்டு மற்ற கேரக்டர்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தொடரில் கோபியாக நடித்துவருகிறார் நடிகர் சதீஷ். இவர் முன்னதாக சில சீரியல்கள், படங்களில் நடித்திருந்தாலும் பாக்கியலட்சுமி தொடர் இவருக்கு மிகவும் சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.


 இந்தக் கேரக்டருக்கு இவர்தான் பொருத்தம் என்று கூறும் வகையில் இந்த கேரக்டர் அமைந்துள்ளது. தான் ஆசைப்படும் வாழ்க்கைக்காக திருமணமான பிள்ளைகளுடன் தான் வாழ்ந்துவந்த வாழ்க்கையை உதறித்தள்ளும் கோபி, தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு, இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்துக் கொள்கிறார்.

 தான் விரும்பிய கனவு வாழ்க்கை தனக்கு கிடைக்கும் என்ற நப்பாசையில் இவர் எடுக்கும் இந்த முடிவு இவருக்கே விபரீதமாக முடிந்துள்ளது.இதையடுத்து விரக்தியடையும் கோபி, குடி பழக்கத்திற்கு ஆளாவதாக கதைக்களம் நகர்ந்து வருகிறது.இந்த நிலையில் இவர் தற்பொழுது இந்த சீரியலில் தன்னுடைய மாமியாராக நடித்து வருபவருடனும் அவருடைய அம்மா காரெக்டரில் நடிக்கும் ஈஸ்வரி கதாப்பாத்திரத்துடன் இணைந்தும் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.



 


Advertisement

Advertisement