சிம்பு நடிப்பில் உருவாகி அண்மையில் வெளியாகியிருந்த திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாக்கியுள்ள இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது. இந்தப் படத்தினை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார்.
இப்படத்தின் ட்ரெய்லர் வௌியீட்டு விழா கூட அண்மையில் நடைபெற்றது.சிம்புவின் தீவிர ரசிகராக இருப்பவர் தான் கூல் சுரேஷ்.இவர் மூலம் தான் வெந்து தணிந்தது காடு திரைப்படம் அதிக ப்ரமோஷன் செய்யப்பட்டது. வெந்து தணிந்தது காடு வெளியானதும் அவருக்கு ஏகபோக விமர்சனங்கள் வரத் துவக்கிவிட்டது. இதுகுறித்து கண்ணீர் மல்க சமீபத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார் கூல் சுரேஷ்.
இந்நிலையில் அவரது வீடியோவை குறிப்பிட்டு நடிகை விஜயலக்சுமி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது அக்கா மகள் சிம்பு வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் இருப்பதாகவும் அவருக்கு உதவி செய்தால் கூல் சுரேஷை விட அதிகமாக சிம்புவிற்காக குரல் கொடுப்பேன் என கூறியுள்ளார் விஜயலட்சுமி.
அதாவது தனது அக்காவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனது மகனை கவனிக்க இயலாது போனது இதனால் சிம்பு வீட்டிற்கு அருகில் உள்ள ஜெயப்பிரதாவின் வீட்டில் அவரது மகள் இருக்கிறாளாம், அவருக்கு உதவி செய்தால் தான் சிம்புவிற்காக 10மடங்கு அதிகமாக ஆதரவு தெரிவிப்பேன் என கூறியுள்ளார்.
இவரின் இந்த பதிவால் திரையுலகப் பிரபலங்கள் கடும் குழப்பத்தில் உள்ளதோடு இந்த விடயம் பரபரப்பாக பேசப்பட்டு வருவதையும் காணலாம்.
Listen News!