• Nov 10 2024

நான் ஹீரோவாக நடித்திருந்தால் இவருடைய படத்தில் தான் நடித்திருப்பேன்-ஷங்கரின் சுவாரஸியமான பேட்டி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குநராக வலம் வருபவர் தான் ஷங்கர். இவர் தற்பொழுது நடிகர் ராம் சரணை வைத்து ராம் சரணின் 15 என்னும் படத்தை இயக்கி வருகின்றார்.இப்படத்தைத் தொடர்ந்து இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கலாம் என்று கூறப்படுகின்றது.

இந்த நிலையில் இவர் முதல் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய விடயம் ஒன்று வைரலாகி வருகின்றது. அந்த பேட்டியில் கூறியதாவது தனக்கு இயக்குநர்கள் பாலச்சந்தர், பாரதிராஜா, மகேந்திரன் மற்றும் பாலு மகேந்திரா ஆகிய நான்கு பேரையும் மிகவும் பிடிக்கும். ஏக் துஜே கே லியேவின் ஒரிஜினல் பதிப்பான கமல் நடித்த தெலுங்கு படம் மரோசரித்திரா தனக்கு பிடித்த பாலச்சந்தர் படம் என்றும், பாரதிராஜா இயக்கிய நிறைய படங்கள் பிடிக்கும். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் 16 வயதினிலே மற்றும் முதல் மரியாதை மிகவும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார். மகேந்திரனின் நெஞ்சத்தை கிள்ளாதே மற்றும் உதிரிப் பூக்கள். பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறை ஆகிய படங்கள் தன்னுடைய ஃபேவரைட் என்று கூறியுள்ளார். மூன்றாம் பிறை படத்தை ஒரே வாரத்தில் மூன்று முறை திரையரங்கில் பார்த்திருக்கிறாராம்.

ஒரு வேளை நீங்கள் நடிகரானால், யார் உங்களை இயக்க வேண்டும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, இயக்குநர் பாலச்சந்தர் இயக்கத்தில் நடிக்க ஆசை என்று தெரிவித்துள்ளார். சினிமா துறைக்கு வருவதற்கு முன்பே மேடை நாடகங்களில் அவர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி அவருடைய குருநாதர் SA சந்திரசேகர் இயக்கிய படங்களில் சிறிய கதாப்பாத்திரங்களிலும் நடித்திருப்பார்.

முதலில் அழகிய குயிலே என்கிற கிராமத்து கதையைத்தான் படமாக்க நினைத்தாராம் ஷங்கர். ஆனால் ஜென்டில்மேன் கொடுத்த வெற்றி அவரது பாதையை மாற்றி அமைத்தது. இப்போது மக்கள் தன்னிடம் கிங் காங் போன்ற படங்கள்தான் எதிர்ப்பார்க்கிறார்கள். அவர்களுக்கு குயிலே படத்தை கொடுத்தால் சிறியதாக தோன்றும். ஒரு வேளை எடுத்தால், அதில் விக்ரம்தான் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement