• Nov 14 2024

நான் கதை சொன்னால் விஜய் பயந்து தான் கேட்பார்- இயக்குநர் மிஷ்கின் கொடுத்த அதிர்ச்சிப் பேட்டி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வருபவர் தான் மிஷ்கின். இவர் சித்திரம் பேசுதடி , அஞ்சாதே, நந்தலாலா தொடங்கி ஓநாயும் ஆட்டுக்குட்டியும், துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட பல படங்களையும் இயக்கி உள்ளார். 

தற்போது பிசாசு 2 படத்தை மிஷ்கின் இயக்கி இருந்த நிலையில்,மேலும், இந்த படத்தில் முதன்மை கதாபத்திரத்தில் ஆண்ட்ரியாவும், சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.


இந்த நிலையில் பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார்.அதில் இதில் வெகுஜன ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் முக்கிய இயக்குநராக திகழும் மிஷ்கின் மார்க்கெட் ரீதியாகவும் சம்பள ரீதியாகவும் பெரிய ஹீரோவாக இருக்கும் நட்சத்திரங்களை இயக்குவதில் சிரமம் இருக்கிறதா என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த இயக்குநர் மிஷ்கின், “ஒரு பெரிய ஹீரோ இருக்கிறார்.. அவரை திடீரென அவருடைய வழக்கமான பாணியில் இருந்து மாற்றி வழக்கத்துக்கு மாறான ஒரு சினிமாவை நடிக்கச் சொல்லும் பொழுது அந்த படம் ஒரு மிகப்பெரிய அளவில் வெற்றி அடையாத போது அவருக்கு அது பெரிய பயத்தை கொடுக்கும். நான், இயக்குநர் ராம், தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்ட இயக்குநர்கள் எல்லாம் கிட்டத்தட்ட ரியலஸ்டிக் பேன்டசி வகையான திரைப்படங்களை  இயக்குவதற்கு முயற்சிக்கிறோம்.

இந்த திரைப்படங்களில் மிகவும் அதீத கற்பனவாத நிகழ்வுகள் இருக்கும். நான் போய் விஜய்க்கு கதை சொல்லும் பொழுது விஜய் ஒரு கமர்சியல் படம் என்னிடமிருந்து எதிர்பார்ப்பார்.தன்னுடைய ரசிகர்களை ஏமாற்ற கூடாது என்று அவர் நினைப்பார். மிஷ்கின் படங்களை விஜய் பார்ப்பார். ஆனால் விஜய் திரைப்படங்கள் மிஷ்கின் பாணியில் இருப்பது என்பது நிச்சயமாக விஜய் ரசிகர்களை ஏமாற்றக் கூடலாம் என்று அவர் கருதலாம். நான் அப்படியான ஹீரோக்களை வைத்து என் பாணியினால படத்தை உருவாக்க நினைப்பது அவர்களுக்கு செய்யும் வன்முறை. அவர்களின் எதிர்பார்ப்பு மிகவும் நியாயமானது.


எனக்கும் சில நல்ல பார்வையாளர்கள் இருக்கிறார்கள். சுமார் 10 லட்சம் பேர் தமிழகத்தில் நான் எடுக்கும் படங்களை பார்க்கிறார்கள். நான் இப்படி இறங்கினால் என்னை கடுமையாக விமர்சிப்பவர்களும் இவர்கள்தான். மிஷ்கின் காசுக்காக ஆசைப்பட்டு விட்டார் என்று சொல்லிவிடுவார்கள். நான் கவனமாகவே என்னுடைய படங்களை உருவாக்குகிறேன். எனக்கு மிகப்பெரிய லட்சியங்கள் இல்லை. 200 கார், 20 மாடி பங்களா என்று ஆடம்பரமாக சுகிக்க விரும்பவில்லை. எனவே நான் கதை சொல்லும் பொழுது விஜய் பயந்து தான் கதை கேட்பார்.

அப்படியும் மீதி சுவாரஸ்யமான ஒரு கதை சொன்னால் அவர் பண்ணுவார். துப்பறிவாளன் திரைப்படம் விஷாலுக்கு என்று கமர்சியலாக பண்ணப்பட்ட படம்தான். இதேபோல் தாணு சாருக்கு ஒரு படம் பண்ணுகிறேன். அந்த கதை சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது இரண்டாவது நிமிடத்திலே கதையை நிறுத்திய அவர் அட்வான்ஸ் கொடுத்து கதை மிகவும் பிடித்திருக்கிறது என்றார்.” என கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement