• Nov 17 2024

இங்க யாரும் சண்டை போடலன்னா உங்க தேவையே இல்ல"-பேசவே விடாமல் ஜெயித்த ஷிவின், Ticket to Finale-ல் நடந்தது என்ன?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது  அனைத்து போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எதிர்பார்த்த Ticket To Finale சுற்று தற்போது ஆரம்பமாகி உள்ளதாக தெரிகிறது. நிறைய கடினமான போட்டிகள் உள்ளிட்டவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், அனைத்து போட்டியாளர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் எந்த போட்டியாளர் முதல் ஆளாக இறுதி சுற்றுக்கு முன்னேறுவார் என்பதை அறியவும் ஆவலாக உள்ளனர். அந்த வகையில் 86வது நாளில் என்ன நடந்தத என்று பார்ப்போம்.

முதலில் ஒரு டாஸ்க் நடந்தது. நேராக வைத்திருக்கும் கம்பியில் இறுதியாக ஒரு கூடை வைத்திருக்கப்படும். அந்த கம்பி மீது பலகையை அடுக்கி தரப்பட்ட பந்தை அந்த பலகை மீது உருட்டி கூடையினுள் வீழ்த்த வேணடும். இதனை அசால்ட்டாக செய்து மைனா நந்தினி வெற்றி பெற்றார்.


தொடர்ந்து இரண்டு பேர் ஆர்கியூ பண்ண வேண்டும். இதில் யார் அதிகமாக ஆர்கியூ பண்ணுறார்களோ அவர்களுக்கு ஹவுஸ்மேட்ஸ் புள்ளி வழங்க வேண்டும்.இதில் யார் அதிகமான புள்ளி பெறுவார்களோ அவர்களே பெறுவார்கள் என்று கூறப்பட்டது. அதன்படி ஒவ்வொருத்தரும் ஆர்கியூ பண்ண ஆரம்பித்தார்கள்.

மைனா நந்தினி மற்றும் அமுதவாணன் ஆகியோர்களுக்கு இடையே நடந்த விவாதத்தின் போது, ஒரு டாஸ்க்கில் தனக்கு வாய்ப்பு தராமல் போனது பற்றி கேள்வி ஒன்றை மைனா நந்தினி முன் வைத்து முறையிடுகிறார். இதற்கு பதில் சொல்லும் அமுதவாணன், கதிரவன், ஏடிகே, விக்ரமன் உள்ளிட்ட பலருக்கும் வாய்ப்பு கொடுத்ததாகவும் அதில் விக்ரமன் கூட ஒரு சில டாஸ்க்கில் சிறப்பாக நடித்திருந்தார் என்றும் பதில் தெரிவிக்கிறார்.


அந்த சமயத்தில், விக்ரமனுக்கு வாய்ப்பு கொடுத்து விட்டு பின்னால் அமுதவாணன் என்ன பேசினார் என்பதை நினைவுகூர்ந்த மைனா, ராபர்ட் மாஸ்டர் வாய்ப்பை தானாக முன் வந்து விக்ரமன் வாங்கிக் கொண்டதை அமுதவாணன் விமர்சித்தது பற்றியும் பேசுகிறார். இதற்கடுத்து பேசும் அமுதவாணன், "பெஸ்ட் சொல்லுறத விட்டுட்டு ஒரு ஆள பத்தி போட்டு கொடுக்குறதே தப்பு" என தெரிவிக்கிறார். இதனை கேட்டதுமே விக்ரமன், மைனா நந்தினி, ஷிவின் உள்ளிட்டோர் சிரித்தார்கள்.இதில் மைனா வெற்றி பெற்றார்.

தொடர்ந்து கதிரவன் மற்றும் விக்ரமன் ஆகியோர் பேசினார்கள்.அப்போது பேசிய கதிரவன், "இரண்டு பேருக்கு நடுவுல சண்டை நடக்கிற போது ஏன் சண்டை போடுறீங்க அப்படின்னு கேட்குறதுக்காக நான் இந்த வீட்டுக்கு வரல. முதல்ல நான் இந்த வீட்டுக்கு வந்தது இங்க இருக்கிற மக்களையும் வெளிய பாத்துட்டு இருக்குறவங்களையும் Entertainment பண்றதுக்காக தான் இந்த வீட்டுக்கு வந்தேன்.


அது ஒரு முக்கியமான அம்சமா விக்ரமனை கம்பேர் பண்றப்போ நான் பார்க்கிறேன். ஏன்னா, இந்த வீட்ல ரெண்டு பேர் பிரச்சனை வரும்போது தான் உங்களோட (விக்ரமன்) சேவை தேவைப்படுது தவிர இந்த வீட்ல பிரச்சனை பண்ணாம என்ன மாதிரியோ, இல்ல வேற யார் மாதிரியும் ஆட்கள் இருந்தாங்கன்னா, நீங்க அங்க மையமா இருக்கவே முடியாதுன்னு தான் நான் சொல்றேன். இப்போ ஒரு அஞ்சு பேர் இருக்காங்க, நான் அவங்கள கூப்பிட்டு ஒரு டான்ஸ் ஆடலாம், மியூசிக் போடலாம். ஆனா ரெண்டு பேருக்கு பிரச்சனை வரும் போது மட்டும் தான் நீங்க தேவை. அதன் அடிப்படையில உங்கள விட நான் தான் இந்த வீட்ல பெஸ்ட்டா ஃபீல் பண்றேன்.

அது மட்டுமில்லாம் இத்தனை வாரங்கள் வந்த டாஸ்க் எல்லாத்துலயும் சரி, நம்ம தனித்தனியா பண்ண டாஸ்க் ஆனாலும் சரி உங்களை விட நான் பெட்டராவே பண்ணி இருக்கேன். சுவாரஸ்யம் கம்மின்னு ஒரு பெயர் நான் இந்த வீட்ல எடுத்ததில்லை. அதே மாதிரி Worst-ன்னு சொல்லி நான் ஜெயிலுக்கும் போனதில்ல. ஏன்னா ஒவ்வொரு டாஸ்க்லயும் என்ன தனியா காட்ட அவுட் ஆப் தி பாக்ஸ் என்ன பண்ண முடியுமோ அத நான் பண்ணி இருக்கேன்" என விக்ரமனை விட தான் சிறந்த போட்டியாளர் என தான் நினைக்கும் புள்ளிகளை கதிரவன் முன் வைத்தார். இருப்பினும் விக்ரமன் கூலாக வெற்றி பெற்றார்.


அதே போல அசீம் மற்றும் ரச்சிதா இருவரும் பேச ஆரம்பித்தனார். அப்போது அசீம் பிக் பாஸ் வீட்டில் 87 நாட்கள் என்ன பண்ணீங்க? பெய்டு ஹாலிடேக்கு வந்து இருக்கீங்களா? என்று கேட்டார்களே அதைப்பற்றி என்ன நினைக்கிறீங்க என்று கேட்டார். இதற்கு பதிலளித்த ரச்சிதா, நான் டாஸ்கில் ஜெயிச்சது,விளையாடியது எல்லாம் உங்களுக்கு நிறைவா தெரியவில்லையா என கேட்டார்.இதையடுத்து, பேசிய அசீம், நீங்க நிறைவாகத் தெரியிற அளவிற்கு இந்த வீட்டில் என்ன பண்ணி இருக்கீங்க எனக்கேட்க. அதற்கு ரச்சிதா ரீல் முகம், ரியல் முகம் எல்லாமே நான் வெளிய நடிச்சாச்சு அசீம், இங்க வந்து நான் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறியதோடு இதில் ரச்சிதா வெற்றி பெற்றார்.

தொடர்ந்து ஷிவின் மற்றும் ஏடிகேவிற்கு இடையில் பேச்சு வார்த்தை நடந்த போது ஷிவின் ஏடிகேவை பேசவே விடாமல் தனது கருத்தை மட்டும் முன் வைத்துக் கொண்டு இருந்தார். இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் கடுப்பான ஏடிகே இப்படி இருந்தால் எப்படி பேச முடியும் என்று கூறினார். இதில் ஷிவின் வெற்றி பெற்றார். இவர்களைப் போல வெற்றி பெற்றவர்களுக்கிடையில் மீண்டும் மோதல் ஆரம்பமாகியது.


அதன்படி நல்ல நண்பர்களான ஷிவின் மற்றும் விக்ரமனுக்கிடையில் பேச்சு வார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தை அதிக நேரம் சென்றதோடு இருவரும் அனல் பறக்கும் விதமாக பேசிட்டு இருந்தார்கள்.இதில் ஷிவின் வெற்றி பெற்றார். தொடர்ந்து மூன்றாவதாக ஒரு டாஸ்க் நடந்தது. அதாவது சிக் சாஃக் மாதிரி ஒரு கம்பி இருக்கும் அந்த கம்பியில் நடந்து அதன் முன்னாடி இருக்கும் கூடையில் பந்துகளைப் போட வேண்டும். இந்த டாஸ்க்கினை எல்லோரும் செய்து முடித்தார்கள். ஆனால் அசீமால் இந்த டாஸ்க்கினை செய்து முடிக்க முடியவில்லை. இதனால் அந்த டாஸ்க் நீண்ட நேரம் நடைபெற்றதோடு இந்த டாஸ்க்குடன் இந்த எப்பிஷோட் முடிவடைந்ததையும் காணலாம்.



Advertisement

Advertisement