தமிழ் சினிமாவில் 80களில் பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் தான் சில்க் ஸ்மிதா. இவரது கவர்ச்சியை பார்க்கவே நிறைய இளம் படையினர் திரண்டு படத்தை வெற்றி படமாக ஆக்கி உள்ளார்கள். இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கின்றார்.
நான்கு ஆண்டுகளிலேயே சுமார் 200 பழங்களுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.இருப்பினும் தனது சொந்தப் பிரச்சினை காரணமாக திடீரென தற்கொலை செய்து கொண்டார். இது ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவரது இறப்பிற்கு காதல் தோல்வி மற்றும் கடன் பிரச்சனை போன்ற நிறைய காரணங்கள் கூறப்பட்டாலும் இதுதான் முக்கியமான காரணம் என்று யாராலும் சொல்ல முடியவில்லை.
சில்க் ஸ்மிதா அவர்கள் நிறைய திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் அவருக்கு பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களிடமிருந்து பாலியல் தொல்லைகள் வர ஆரம்பித்தன.இதில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இரண்டு பேரும் சில்க் ஸ்மிதா அவர்களிடம் நெருங்கி பழகவே இல்லை.
திரைப்படத்தில் நடிப்பதை தவிர அவருடன் பேசுவது கூட கிடையாது. காரணம் சில்க் ஸ்மிதா கவர்ச்சி நடிகையாக இருப்பதன் மூலம் தனக்கும் அவருக்கும் எளிதில் கிசுகிசு செய்திகள் வெளியாகும் என்பதில் கவனத்துடன் இருந்தார் நடிகர் ரஜினிகாந்த்.
மேலும் சில்க் ஸ்மிதா அவர்கள் மது போன்ற போதை பழக்கங்களுக்கும் அடிமையாக இருந்தார். இதற்கு காரணம் திரைத்துறையில் அவருக்கு ஏற்படும் மன உளைச்சலும் நிறைய பாலியல் தொல்லைகளும் காரணமாகும் அவற்றையெல்லாம் மறக்கவே போதை பழக்கங்களுக்கு அடிமையானார்.
மேலும் அவருக்கு தாய் தந்தை இரண்டு பேருமே இறந்த நிலையில் அவரது உறவினர்கள் பிடியில் சிக்கி சின்னாபின்னமான ஒரு நடிகையாக இருந்திருக்கிறார். காரணம் இவர் கவர்ச்சியாக நடித்து நிறைய பணம் சம்பாதிக்க அவர்கள் தான் இவரை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதும் பின்னர் தெரிய வந்திருக்கின்றது.
இந்த நிலையில் சில்க் ஸ்மிதா அவர்கள் அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதற்கு காரணம் தெளிவாக தெரியவில்லை அவருடைய காதல் தோல்வியா அல்லது குடும்ப பிரச்சனையா மற்றும் திரை துறையில் பாலியல் தொல்லையா என்பது பற்றி இன்றுவரை அவரது மர்மம் ஆகவே இருக்கிறது. ஆனால் இறப்பதற்கு முன்னதாக அனுராதா எனும் மற்றொரு கவர்ச்சி நடிகையை அவர் தனது வீட்டிற்கு வருமாறு அழைத்திருக்கிறார்.
ஆனால் அவரால் அந்த நேரத்தில் வேறொரு வேலையில் பிஸியாக இருந்ததன் மூலம் நான் பின்னர் வருகிறேன் என்று சொல்லி இருக்கிறார். அன்று இரவு அதான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை அனுராதா அவர்கள் அவர் கூப்பிட்ட போது சென்றிருந்தால் இந்நேரம் சில்க் அவர்கள் உயிரோடு இருந்திருப்பாரோ என்னவோ என்று நினைக்கத் தோன்றுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!