• Sep 21 2024

சிம்பு ஓகே சொன்னால் கிளம்ப வேண்டியது தான் ஆனால் சில மாற்றம் செய்ய வேண்டும்- பார்த்திபன் கொடுத்த அப்டேட்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவஜல் 90களில் முக்கிய நடிகையாக இருப்பவர் தான் பார்த்திபன். இவரது நடிப்பில் உருவாகி வெளியான இப்படம் சிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல பாராட்டை பெற்று வருகிறது. இப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது.

இதனால் பார்த்திபன் அடுத்ததாக என்ன செய்வார் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இந்நிலையில் அண்மையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட பார்த்திபனிடம் உங்களது திரைப்படங்களில் புதிய பாதை திரைப்படத்தை ரீமேக் செய்தாலோ அல்லது அதன் இரண்டாம் பாகம் எடுத்தாலோ யார் ஹீரோவாக நடிப்பார்கள் என்று கேட்டார்கள்.

அதற்கு சட்டான பதிலளித்த பார்த்திபன், அதற்கு சரியான ஆள் சிம்பு தான். இது குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சாரிடமும் பேசி உள்ளோம். அவரும் நீ படத்தை எடு என்று தைரியமாக கூறினார். சிம்புவும் புதிய பாதை ரீமேக்கில் ஆர்வமாக இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.சிம்பு சரி என கூறினால் உடனடியாக கதை தயார் செய்து சூட்டிங் கிளம்ப வேண்டியது தான்.

இவ்வாறு சட்டென பதில் அளித்தார் பார்த்திபன். ஆனால் புதிய பாதை படத்தை அப்படியே எடுக்க முடியாது. தற்போது அதற்கு ஏற்றது போல கதையில் சில மாற்றங்கள் மட்டும் செய்ய வேண்டும் என்று பார்த்திபன் கூறியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement