தமிழ் சினிமாவில் 90களில் தொடங்கி 2000ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் மீனா. இவர் ரஜினி ,கமல் ,விஜய், அஜித் எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.தற்பொழுதும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றார்.
அந்த வகையில் ரஜினி நடிப்பில் வெளியாகியிருந்த அண்ணாத்த திரைப்படத்தில் இறுதியாக நடித்திருந்தார். இவ்வாறு படங்களில் இவர் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போது ஜூன் மாதம் 27ம் திகதி இவரது கணவர் இறப்புக்குள்ளானார். இவரது இறப்பு ரசிகர்களை கடும் சோகத்துக்குள் தள்ளியது.
மேலும் கடந்த பல மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென மரணமடைந்தார். இந்த நிலையில் தனது கணவரது இறப்பு குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார்.வித்யாசாகருக்கு உறுப்புகள் தானம் செய்ய donors கிடைத்து இருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என தெரிவித்து இருக்கிறார்.
"அப்படி நடந்திருந்தால் என் வாழ்க்கையே மாறி இருக்கும். ஒருவர் உறுப்பு தானம் செய்தால் 8 உயிர்களை காப்பாற்ற முடியும்.""அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து நான் தற்போது organ donation செய்கிறேன்" என மீனா தெரிவித்து இருக்கிறார். இவரின் இந்தப் பதிவினை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!