• Nov 19 2024

இடம் நல்லா இருந்தால் காருக்குள்ளேயே பண்ண சொல்லுவாங்க- ஷுட்டிங்கில் நடக்கும் விஷயங்களை ஓபனாகப் பேசிய காயத்ரி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை காயத்ரி. இவர் 18 வயசு, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, சூப்பர் டீலக்ஸ், உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கின்றார். இருப்பினும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் தான்.

இப்படத்தில் இவர் நடிகர் ஃபகத் ஃபாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இதில் விஜய்சேதுபதி கழுத்தை அறுத்துப் போட்டிருக்கும் காட்சிகள் ரசிகர்களை பதை பதைக்க வைத்தன.ஒரு படத்தில் பார்த்தால் பக்கா கிராமத்து பெண்ணாக இருக்கும் காயத்ரி, இன்னொரு படத்தில் அப்படியே சிட்டி கேர்ளாக மாறியிருப்பார்.


இந்த நிலையில் அண்மையில் ஓர் பேட்டியளித்திருந்தார். அதில்  படங்களில் எப்படி நடிக்கிறோமோ அதே போலத்தான் நடிகர்கள் ரியல் லைஃப்பில் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லையே என்று அந்த பேட்டியில் பேசியுள்ளார் .சினிமாவில் ஒரு விஷயத்தை மாற்ற வேண்டும் என்றால், எதை மாற்ற நீங்க விரும்புறீங்க என்கிற கேள்விக்கு பதில் அளித்த காயத்ரி, இந்த விஷயம் எனக்கே நடந்திருக்கு, ஷூட்டிங்கில் ஒரே ஒருத்தர் தான் பொண்ணு, மத்தவங்க எல்லாம் ஜென்ட்ஸா இருந்தா, ஒரு பாத்ரூம் அரேஞ்ச் பண்ணக் கூட மாட்டாங்க.. பெண்களுக்குத் தேவையான பிரைவேஸி மற்றும் சேஃப்டியை ஷூட்டிங் ஸ்பாட்டில் கூடுதல் கவனத்துடன் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.


ஒரு லொகேஷனில் இருந்து இன்னொரு லொகேஷனுக்குப் போய்க் கொண்டிருக்கும் போது, திடீரென பாதி வழியிலேயே எதையாவது பார்த்து பிடித்துப் போய் விட்டால், இங்கேயே ஒரு மான்டேஜ் சீன் எடுத்துருலாம் என சொல்லி விட்டு, காரிலேயே டிரெஸ் மாத்த சொல்லுவாங்க, அட்லீஸ்ட் நடிகைகளுக்கு ஒரு சின்ன ரூமாவது இருந்தால் தானே உடை மாற்ற முடியும் அதைக் கூட சில பட நிறுவனங்கள் புரிந்துக் கொள்ளாதது ரொம்பவே மோசமான விஷயமா இருக்கு என காயத்ரி அந்த பேட்டியில் படப்பிடிப்பின் போது தனக்கு ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களை ஓபனாக பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement