• Sep 20 2024

இளையராஜா இல்லைன்னா படமே வேண்டாம்... அடம்பிடித்த பிரபல இயக்குநர்! அட இது தான் காரணமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா தற்போதும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், இளையராஜா இசையமைத்தால் மட்டுமே படம் இயக்குவேன் என ஒற்றைக் காலில் நின்றுள்ளார் பிரபல இயக்குநர் ஒருவர்.

மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் ஃபஹத் பாசிலின் தந்தையான இயக்குநர் பாசில் தான் அவர் என தெரியவந்துள்ளது.

தமிழில் முதன்முறையாக 1985ம் ஆண்டு பூவே பூச்சூடவா திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து பூவிழி வாசலிலே, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, வருஷம் 16, அரங்கேற்ற வேளை, கற்பூர முல்லை, கிளிப்பேச்சு கேட்கவா, காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, ஒரு நாள் ஒரு கனவு ஆகிய பத்து படங்களை இயக்கியுள்ளார். பாசிலின் படங்கள் அனைத்துமே தமிழ் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன.

முக்கியமாக தமிழில் பாசில் இயக்கிய படங்கள் அனைத்துக்கும் இளையராஜா தான் இசையமைத்திருந்தார். பாசில் - இளையராஜா காம்போவில் வெளியான படங்களில் பாடல்களும் செம்ம ஹிட்டடித்தன. ஆனால், பாசில் படங்கள் இயக்கும் முன்னர் இளையராஜாவை தான் முதலில் கமிட் செய்வாராம். இளையராஜா ஓக்கே சொல்லாவிட்டால் அவர் கால்ஷீட் தரும் வரை படம் இயக்காமல் காத்திருப்பாராம் பாசில்.

இளையராஜா பிஸியாக இருந்த போது பாசிலின் ஒருசில படங்களுக்கு இசையமைக்க நேரமில்லை என கூறியுள்ளார். ஆனால், "நீங்கள் இல்லாமல் படம் இயக்குவதாக இல்லை, ஃப்ரியானதும் சொல்லுங்க வரேன்' என சொல்லிவிட்டு சென்றுவிட்டாராம். இப்படி இளையராஜாவுக்காக ஒற்றைக் காலில் நின்றதை சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் இயக்குநர் பாசில்.


Advertisement

Advertisement