தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் விஜய்யின் தந்தை S.A. சந்திரசேகர் திரைப்பட இயக்குநராகவும், தாயார் ஷோபா பாடகியாவும் முத்திரைப் பதித்தவர்கள். இவர்கள் இருவருமே விஜய்யின் ஆரம்பகால திரைப்படப் பயணத்துக்கு மிகப்பெரிய சப்போர்ட்டா இருந்தவர்கள்.
இந்நிலையில் நடிகர் விஜய்யின் தாயார், ஷோபா சந்திரசேகர், தற்போது சேனல் ஒன்றுக்கு பிரத்தியேக பேட்டி அளித்தார். பிரபல நடிகையும், இயக்குநரும், சமூக ஆர்வலருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நேர்காணல் செய்தார்.
முன்னதாக தனக்கே உரிய தனித்துவமான அடையாளங்கள் இருந்தாலும், விஜய்யின் அம்மா ஷோபா என தன்னை அறிமுகம் செய்வதிலேயே தான் பெருமிதம் கொள்வதாக கூறியவர், தன் குடும்ப பின்னணி குறித்தும் விவரித்தார்.அப்போது பேசிய ஷோபா சந்திரசேகர், “என் அப்பா நாகிரெட்டி சாரிடம் 3 தலைமுறையாக புரோகிராம் எக்ஸியூடிவாக இருந்தார்.குடும்பத்தில் நாங்கள் அனைவருமே நன்றாக பாடுவோம்.
எங்களுள் SN சுரேந்தர் நன்றாகவே பாடுவார். அவர் நடிகர் மோகனுக்கு 90 படங்களில் குரல் கொடுத்தவர். அவரது மகள் பல்லவி வினோத் துபாயில் உள்ளார், அவரும் நன்றாகவே பாடுவார். விஜய்யும் நன்றாக பாடுகிறார். என் சகோதரர் S.N.சுரேந்தரின் குரலும், என் மாமனாரின் உயரமும் விஜய்க்கு அப்படியே கிடைத்திருக்கிறது.” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ஷோபாவின் மூத்த சகோதரரான S.N. சுரேந்தர், 90ஸ் நடிகர் மோகன் (90 படங்கள்), கார்த்திக் (அலைகள் ஓய்வதில்லை), விஜயகாந்த் (சட்டம் ஒரு இருட்டறை, வெற்றி), ரகுவரன் (ஒரு ஓடை நதியாகிறது), ரகுமான், நாகார்ஜூனா, நடிகர் பிரதாப் போத்தன், நெடுமுடி வேணு (அந்நியன்) ஆகிய நடிகர்களுக்கு பல படங்களில் குரல் கொடுத்தவர். இதேபோல், பொள்ளாச்சி மல ரோட்டுல (பெரியண்ணா), மாமரத்து பூ (ஊமை விழிகள்), மாலை என் வேதனை (சேது), சிக்காத சிட்டொன்று (சேது), கண்மணி நில்லு (ஊமை விழிகள்), சலக்கு சலக்கு (சூர்ய வம்சம்), தேவதைப் போலொரு (கோபுர வாசலலே), பூவே பூவே (ஒன்ஸ்மோர்) ஆகிய ஹிட் பாடல்களை பாடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!