• Sep 21 2024

நாங்க அப்பிடிப் பண்ணினால் அது அவங்கள வேதனைப்படுத்தும்- Gender குறித்து மைனாவுக்கு விக்ரமன் கொடுத்த அட்வைஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம்  Ticket To Finale டாஸ்க் நடைபெற்று வருகின்றது. அதன்படி மிதிவண்டி டாஸ்க், பிரெட் டாஸ்க், Debate டாஸ்க் உள்ளிட்ட பல டாஸ்க்குகள் நடந்தன. இதில் யார் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி அமுதவாணன் இதனை வெற்றி பெற்று முதலாவது இறுதிப் போட்டியாளர்களாக தேர்வாகியுள்ளார்.

இந்த டாஸ்க் நடக்கும் போது  இடையே ஏராளமான விவாதங்கள் மற்றும் வாக்குவாதங்கள் கூட அரங்கேறி இருந்தது. ஆனாலும் விளையாட்டு முடிந்த பின்னர், அனைவரும் மீண்டும் பழையது போல உற்சாகமாக இருக்கவும், கலகலப்பாக ஒருவரை ஒருவர் ஜாலியாக கலாய்த்துக் கொண்டும் இருக்கின்றனர்.


இந்த நிலையில், Gender குறித்து விக்ரமன் பேசியுள்ள விஷயம் அதிகம் வைரலாகி வருகிறது. "அசீம்கிட்ட Ticket To Finale வச்சாங்கன்னா என்ன பண்ணுவீங்கன்னு தனாவோ யாரோ கேட்டாங்க" என ஆண் மற்றும் பெண் ஆகியோர் மாறும் Role Swap டாஸ்க் குறித்து ரச்சிதா பேசிக் கொண்டிருக்கிறார். 

இதற்கு பதில் சொல்லும் மைனா நந்தினி, TTF டாஸ்க்கில் Role Swap டாஸ்க் இருக்காது என்றும் அது Fun ஆன விஷயம் தான் என்றும் தெரிவிக்கிறார்.இந்த நிலையில், Gender குறித்து பேசும் விக்ரமன், "ஒரு ஆண் வந்து பெண்ணா உடையை மாத்திக்குறது அப்படின்னு ஒரு குறிப்பிட்ட ஆட்கள் பண்றாங்க. ஆனா அத வச்சு நம்ம அவங்கள Fun பண்றோம்னு வச்சுக்கோங்களேன், அது அவங்கள வேதனைப்படுத்தும். Gender-ங்குறது தனி மனிதர் முடிவு செய்வது. ஆணா, பெண்ணா அவங்களோட உறுப்புல கிடையாது, அவங்க முடிவு செய்றது. நடிப்பு என்ற பெயரில் நீங்க Fun பண்ணக்கூடாதுல்ல. நீங்க நடிக்கிறத பாராட்டலாம். ஆனால் அத வச்சு ஒரு  மாதிரி நகைச்சுவை பொருளா மாற்றுவது தவறு" என விக்ரமன் கூறுகிறார் .



















Advertisement

Advertisement