• Sep 20 2024

வாய்ப்புக் கேட்டால் உடம்பு பற்றி தான் பேசுறாங்க- நண்பனே நள்ளிரவில் டாச்சர் செய்கிறான்- நடிகை காஜல் பசுபதி வேதனை

stella / 1 year ago

Advertisement

Listen News!

சன் மியூசிக் சேனலின் மூலம் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமாகியவர் தான் காஜல் பசுபதி.இதனைத் தொடர்ந்து கடந்த 2006ம் ஆண்டு வெளியான டிஸ்யூம் படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் அறிமுகமாகினார். தொடர்ந்து சூல் ராஜா எம்பிபிஎஸ், ட்ரீம்ஸ், கள்வனின் காதலி, இதய திருடன், சிங்கம், கோ, மவுன குரு, கவுரவம், என்னமோ நடக்குது, இரும்பு குதிரை, அழகு குட்டி செல்லம், ஆயிரத்தில் இருவர் கலகலப்பு 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கின்றார்.

இது தவிர பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்குபற்றியும் பிரபல்யமானார்.இவர்  மானாட மயிலாட என்னும் நடன நிகழ்ச்சியில் பங்குபற்றிய போது கோரியோகிராஃபரான சாண்டி மாஸ்டரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்துள்ளார்.


மேலும் விவாகரத்திற்குப் பின்னரும் சாண்டி மாஸ்டருடன் நல்ல உறவில் இருந்து வருகின்றார்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள காஜல் அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் தைரியமாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் காஜல் பசுபதி, ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் வாய்ப்பு கேட்ட தன்னிடம் தனது நண்பர் பேசிய விதம் குறித்து வெளிப்படுத்தி வேதனைப் பட்டுள்ளார். 

அதாவது தனது நெருங்கிய தோழியின் காதலருக்கு ஒரு தொலைக்காட்சி சேனலின் தலைமை பொறுப்பில் இருப்பவருடன் நல்ல நட்பு உள்ளதால் அவரிடம் சீரியலில் நடிக்க ஏதாவது சான்ஸ் கிடைக்குமா என கேட்டு சொல்லுமாறு உதவி கேட்டுள்ளார் நடிகை காஜல். அதுவரை காஜலிடம் மரியாதையாக பேசிய அந்த நபர், சான்ஸ் கேட்டப் பிறகு நள்ளிரவில் போன் செய்து, தனக்கு இப்படி ஒரு பெண் வேண்டும் என சில அடையாளங்களை கூறி அசிங்கமாக பேசியுள்ளார்.


இதை ஏன் தன்னிடம் கேட்க வேண்டும் என்று யோசித்த காஜல், வாய்ப்பு கேட்டால் நண்பன் கூட இப்படிதான் பேசுவான் போல என நினைத்து அதன்பிறகு அந்த நபரிடம் பேசுவதையே நிறுத்தி விட்டாராம். அந்த சம்பவத்துக்கு பிறகு யாரிடமும் வாய்ப்பு கேட்க விரும்புவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் வேண்டும் என்றால் சம்பளத்தில் சமரசம் செய்து கொள்ளலாம், வேறு எதிலும் அட்ஜெஸ்ட் செய்ய முடியாது என உறுதியாக தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.














Advertisement

Advertisement