• Nov 14 2024

''பேசலன்னா என் பொண்ணு வாய்லயே குத்துவா''...கமலிடம் கலகலப்பாக பேசிய ரோபோ சங்கர்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தீவிர உடல் நல பிரச்சனைக்குப் பின்னர் உடல் நலம் தெரியுள்ள, ரோபோ சங்கருக்கு போன் செய்து அவருடைய உடல் நலம் பற்றி விசாரித்துள்ளார் நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான உலக நாயகன் கமல்ஹாசன்.

'அசத்தப்போவது யாரு', 'கலக்கப்போவது யாரு', போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மிமிக்கிரி மற்றும் ஸ்டாண்ட் அப் காமெடி செய்து மிகவும் பிரபலமானவர் ரோபோ சங்கர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இவருடைய புகைப்படம் ஒன்று வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த புகைப்படத்தில் ரோபோ சங்கர் மிகவும் உடல் மெலிந்து, ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இருந்தார். 

தன்னுடைய உடல்நலம் மிகவும் மோசமாக முக்கிய காரணம் குடிப்பழக்கம் தான் என்பதை, ரோபோ சங்கர் வெளிப்படையாக கூறியது மட்டுமின்றி,  ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவும் தன்னுடைய தந்தை போல் யாரும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விடக்கூடாது என்று உருக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்தார். 

மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி உள்ள ரோபோ சங்கர், வழக்கம்போல் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் மகள் மற்றும் மனைவியுடன் டான்ஸ் ஆடி ரிலீஸ் வீடியோக்களை வெளியிட்டு கலாய்ப்பு மூட்டி வரும் நிலையில், ரோபோ சங்கருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில், போன் செய்து அவருடைய உடல்நிலை குறித்து விசாரித்துள்ளார் உலக நாயகன் கமலஹாசன். மிகவும் அக்கறையாக உடல் நலத்தை பார்த்துக் கொள்ளும்படியும், கட்டிங் எல்லாம் இனிமேல் வேண்டாம் என கமல் கூற, இனிமே கட்டி எல்லாம் ஒன்றும் கிடையாது சார். அப்படியே இருந்தா கூட வீட்ல இருக்கிறவங்களையும் கூட்டிட்டு தான் போகணும் போல என்று காமெடியாக ரோபோவும் பதிலளித்துள்ளார். மேலும் மனைவி தன்னை நன்றாக கவனித்து வருவதாகவும், வேலா வேலைக்கு சாப்பாடு மற்றும் மருந்துகளை எடுத்துக் கொள்வதாகவும் கூறினார்.

அதேபோல் ஏற்கனவே தன்னுடைய மகளின் திருமணம் குறித்து உங்களிடம் கூறி உள்ளேன். இன்னும் ஆறு மாதத்தில் அவருடைய திருமணம் நடைபெற உள்ளதாகவும், ஆனால் திருமண தேதி குறித்து தற்போது வரை முடிவு செய்யப்படவில்லை. கண்டிப்பாக உங்களுக்கு கூறிவிட்டு தான் எதையும் செய்வேன் என ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார். ரோபோ சங்கரின் மனைவியிடமும் பேசிய கமலஹாசன், ரோபோ சங்கரின் வருங்கால மாப்பிள்ளை மற்றும் இந்திரஜாவிடமும் பேசினார். அப்போது ரோபோ சங்கர் காமெடியாக எல்லாரிடமும் பேசிவிட்டு என் பொண்ணு கிட்ட பேசலனா அவ என் வாயிலே குத்துவா என கூறியது கலகலப்பை ஏற்படுத்தியது. 



Advertisement

Advertisement