• Sep 20 2024

“தளபதியுடன் அப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்தால் பண்ணலாம் ப்ரோ“- ரசிகரின் டுவிட்டுக்கு பதிலளித்த நடிகர் பிரசன்னா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சுசி கணேசன் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான ஃபைவ் ஸ்டார் படம் மூலம் அறிமுகமாகியவர் தான் பிரசன்னா. இதனைத் தொடர்ந்து அழகிய தீயே, கண்ட நாள் முதல், சாது மிரண்டால், அஞ்சாதே, நாணயம், முரண், சென்னையில் ஒரு நாள், பா பண்டி, திருட்டுப்பயலே 2 உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கின்றார்.

இருப்பினும் சில காலம் சினிமாவை விட்டு விலகியிருந்த இவர் குணச்சித்திர வேடங்களிலும் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகின்றார். அந்த வகையில் துப்பறிவாளன் என்னும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதே போல சமீபத்தில் வெளியான ஃபிங்கர்டிப் வெப்சீரிஸில் சிறப்பாக நடித்து அசத்தியிருந்தார்.

டெக்னாலாஜி மூலம் தப்பு செய்பவர்களை டெக்னாலாஜி தெரிந்த எக்லிப்ஸின் துணை கொண்டு கண்டு பிடிக்கும் காட்சிகளும், கடைசியில், அந்த எக்லிப்ஸ் யார் என்பதை கண்டறியும் காட்சிகளிலும் இப்படத்தில் கலக்கி இருப்பார். அத்தோடு இவர் அஜித்துக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டார். அதற்கான பேச்சுவார்த்தைகள் சரியான முறையில் அமையாத நிலையில், அஜித்துக்கு வில்லனாக நடிக்கவில்லை. இதனால் வலிமை படத்தில் கார்த்திகேயாவுக்கு பதிலாக பிரசன்னா வில்லனாக நடித்திருந்தால் படம் வேறலெவலில் இருந்து இருக்கும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்

இந்நிலையில், ரசிகர் ஒருவர், நடிகர் விஜய்க்கு வில்லனாக நீங்க ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்கிற தனது ஆசையை வெளிப்படுத்த, கட்டாயம் அதற்கான வாய்ப்பு கிடைத்தால் பண்ணலாம் ப்ரோ எனக் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement