• Nov 17 2024

அந்த இடத்தில் டாட்டூ போட்டால் மிகவும் துணிச்சலானவர்கள் என்று அர்த்தமாம்- நயன்தாராவும் அப்போ போட்டிருக்கின்றாரே?

stella / 2 years ago

Advertisement

Listen News!


லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்று வந்த நிலையில், தற்போது ஸ்பெயின், பார்சிலோனியாவில் கணவருடன் ஓவர் ரொமான்ஸ் செய்து வருகிறார்.

அத்தோடு விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் அவர் எடுத்துக் கொண்ட அழகிய தருணங்கள் அடங்கிய அனைத்து புகைப்படங்களையும் பதிவிட்டு அப்டேட் செய்து வருகிறார்.


இந்நிலையில், நயன்தாராவின் கழுத்துக்கு பின் புறம் நெக் டாட்டூ ஒன்று இருப்பதை நெட்டிசன்கள் சிலர் கண்டுபிடித்து டிரெண்ட் செய்து வருகின்றனர். அந்த பகுதியில் டாட்டூவை பலரும் போட மாட்டார்கள். அது ரொம்பவே கஷ்டமான ஒன்று. ஆனால், அதையும் மீறி ஒரு சிலர் அந்த இடத்தில் டாட்டூ போட்டு கெத்துக் காட்டி வருகின்றனர். அங்கே டாட்டு போட்டால் துணிச்சலான மற்றும் சவாலான முடிவுகளை எடுக்கக் கூடியவர்கள் என்று அர்த்தமாம்.


ஏற்கனவே நடிகை நயன்தாரா வில்லு படத்தின் சமயத்தில் பிரபுதேவாவை காதலித்து வந்த நிலையில், அவரது பெயரை பச்சைக் குத்தி இருந்தார். பின்னர் அதை அழிக்க முடியாமல் அப்படியே பாசிட்டிவிட்டி என்று மாற்றம் செய்தார். இந்நிலையில், நயன்தாராவின் புதிய கழுத்து டாட்டூ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


Advertisement

Advertisement