• Nov 10 2024

மலையாளத்தில் பேசினால் இவ்வளவு அசிங்கப்படுத்துவீங்களா?- பிக்பாஸால் கடும் சர்ச்சையில் சிக்கிய கமல்ஹாசன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 ஆனது ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இதில் முக்கிய போட்டியாளராகக் கலந்து கொண்டிருந்தவர் தான் கேரளாவை சேர்ந்த ஷெரினா. இவர் நேற்றைய தினம் தான் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

இவர் பிக்பாஸ் வீட்டில் எப்போதும் மலையாளம் மற்றும் ஆங்கிலத்திலேயே பேசிக் கொண்டிருந்தார்.அதை பற்றி பலமுறை கமல் மற்றும் பிக் பாஸ் எச்சரித்தும் அவர் அதை தொடர்ந்து கொண்டே இருந்தார். அதனால் இந்த வாரம் அந்த காரணத்திற்காகவே எலிமினேட் செய்யப்பட்டார்.


அவரை வெளியேற்ற கமல் மலையாளத்தில் எலிமினேஷன் கார்டை காட்டினார்.ஷெரினா செய்தது தவறும் என்றாலும் கமல் அதை பற்றி நீண்ட நேரம் பேசி அசிங்கப்படுத்தினார், அதன் உச்சகட்டமாக மலையாளத்தில் எலிமினேஷன் கார்டை காட்டி இருக்கிறார் என தற்போது சர்ச்சை எழுந்திருக்கிறது.




ஷெரினா தவறு செய்திருந்தாலும் அவரை அசிங்கப்படுத்தாமல் அனுப்பி இருக்கலாம் என்றும் பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் தெரிவித்து வருகிறார்கள். மேலும் ஷெரினா வெளியேறியது வருத்தம் அளிப்பதாகவும் அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement