• Nov 19 2024

இறுக்கி கட்டிப்பிடியுங்க என்று சொன்னால் தட்டி விட்டிடுவார்- விஜயகாந்த் குறித்து பேசிய பிரபல நடிகை

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் விஜயகாந்த்.இவர் நடிப்பில் வெளியாகி பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றிருக்கின்றன. இவர் நடிப்பதைத் தவிர அரசியலிலும் அதிக ஆர்வம் உடையவர்.

மேலும் நடிகர் விஜயகாந்தைப் பற்றி பல சுவாரஸியமான தகவல்களை ஒவ்வொரு பிரபலங்களும் பகிர்ந்த வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகையான நளினி அவரைப் பற்றி கூறிய விடயம் தற்பொழுது வைரலாகி வருகின்றது.

நளினி ஒல்லியாக இருக்க வேண்டும் என்பதற்காக அவரது அம்மா அவருக்கு உணவுக் கட்டுப்பாடுகளை விதித்து டயட்டில் இருக்கச் செய்வாராம். விஜயகாந்திற்கு அவரது நண்பர் ராவுத்தர் கொண்டு வரும் வகை வகையான உணவை பார்த்து நளினி ஏங்கும் பொழுது,"நீ மேக்கப் ரூம்ல வெயிட் பண்ணி ராவுத்தர் கொண்டு வர்ற சாப்பாட சாப்டு. நா உன் அம்மாக்கிட்ட பேச்சு குடுத்து திசை திருப்பிடுறேன்" என்று விஜயகாந்த் கூறுவாராம்.

அதே போல் ராவுத்தர் கொண்டு வரும் உணவை மேக்கப் ரூமிற்கு எடுத்துச் செல்கையில், நளினியின் அம்மா என்ன எடுத்துச் செல்கிறீர்கள் என்று கேட்க,"அது ஒன்னும் இல்லம்மா, எனக்குதான் எடுத்துட்டு போறாரு. உங்க பொண்ணுக்கு குடுப்பேனா? ஏற்கனவே சாப்ட்டு சாப்ட்டு குந்தாணி மாதிரி மாறிக்கிட்டு வரா" என்று விஜயகாந்த் அவர்களிடம் பேசி சமாளித்துவிட்டு நளினிக்கு பிடித்த உணவை உண்ண வைப்பார் என்று நளினி கூறியுள்ளார்.

விஜயகாந்தும் நளினியும் கிட்டத்தட்ட 14 படங்களில் ஒன்றாக நடித்துள்ளார்களாம். அப்படி இருந்தும் விஜயகாந்தை அண்ணா என்றுதான் அழைப்பாராம் நளினி. அதனால் நடிக்கும்போது கட்டிப்பிடிக்கும் காட்சிகள் வந்தால்,"அண்ணா நல்லா கட்டிப்பிடிங்கண்ணா, கூச்சப்படாதீங்க" என்று தான் கூறும்போது,"கட்டிப்பிடிக்கும்போது அண்ணான்னு சொன்னா எப்படி நடிக்கிறது" என்று கூறிவிட்டு விஜயகாந்த் தன்னை தள்ளிவிடுவார் என்று நளினி பல சுவாரஸ்யமான தகவல்களை கூறியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement