• Nov 19 2024

அப்பிடி சொன்னால் காது கேட்காது போடா என்று சொல்லி விரட்டி விட்டிருவேன்- ரேகா நாயர் கொடுத்த பேர்ஸ்னல் இன்டர்வியூ

stella / 2 years ago

Advertisement

Listen News!


சின்னத்திரை சீரியல்கள் மற்றும் சில திரைப்படங்களில் நடித்து வருபவர் தான் ரேகா நாயர். இவர் இரவின் நிழல் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.மேலும் இவர் மறைந்த நடிகை சித்ரா குறித்த விடயங்களை பேசியும் பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கின்றார்.

இவ்வாறு இருக்கையில் பல பேட்டிகளிலும் பங்குபற்றி வருகின்றார். இந்த நிலையில் இவர் அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கின்றார். அந்த பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் கூறிய விடயங்களும் தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்


கேள்வி- சோசியல் மீடியா, சினிமான்னு எல்லா இடங்களிலும் உருவக்கேலி நடக்குது. குறிப்பா பெண்களுக்கு இது அந்த காலத்துல இருந்து இந்த காலம் வரையில் நடந்துக்கிட்டேதான் இருக்கிறது. பொதுவா இப்படி ஒருத்தரோட உடல்மொழியை வைத்து கேலி செய்யுறதை நீங்க எப்படி பார்க்குறீங்க?

பதில்- "ஹிந்தி தெரியாது போடா!!" அப்படின்னு சொல்ற மாதிரி "காது கேட்காது போடா!" அப்படினு தான் சொல்லணும். நம்மளோட நிறம், குணம்,அழகுன்னு எல்லாமே கடவுள் கொடுத்ததுன்னு சொல்றதைவிட இயற்கை கொடுத்ததுன்னு தான் சொல்லணும். இயற்கை நமக்கு என்ன கொடுத்ததோ அதை அப்படியே நம்ம ஏத்துக்கணும். ஒருத்தர் குண்டா இருந்தாலும்... ஒல்லியா இருந்தாலும்... கறுப்பா இருந்தாலும் அதை அப்படியே ஏத்துக்கக்கூடிய மனநிலை நமக்கு இருக்கணும். அந்த மனநிலை இல்லைன்னா அதை பாடிஷேமிங்னு சொல்லக்கூடாது "மைண்ட் ஷேமிங்"னு தான் சொல்லணும். ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து இறக்கும் வரை அதோட உடல் சுருக்கங்களை வைத்து மனிதர்கள் கவிதை எழுதிட்டுதான் இருப்பாங்க. அதெல்லாம் கண்டுக்காம போயிட்டே இருக்கணும் என்று கூறினார்.

கேள்வி- நம்ம எவ்வளவுதான் மனவலிமையோட இருந்தாலும் நம்ம உடைஞ்சு அழுத தருணம் ஒண்ணு கண்டிப்பா நம்ம வாழ்க்கையில இருக்கும். அப்படி உங்க வாழ்க்கையில் நீங்க உடைஞ்ச தருணம் எது


பதில்- நான் நிறைய இடத்தில் உடைஞ்சிருக்கேன். என்னோட மனசுக்கு அன்பானவங்க.. என்னோட செண்டிமென்டா இருக்கிறவங்க... பொய் சொல்லி ஏமாத்தினால் எனக்கு ரொம்ப வலிக்கும். அப்போ ரொம்ப உடைஞ்சிடுவேன். பிறகு, கொஞ்ச நேரத்தில் நானே என்னை தேற்றி ஒரு குட்டி ஸ்டோரிலாம் எனக்கு நானே சொல்லிட்டு இயல்பாயிருவேன். என்னை ஏமாத்திட்டாங்கனு யாரு கிட்டேயும் சொல்லி வருத்தப்படவும் மாட்டேன் என கூறினார்.

கேள்வி- ஹீத் லெட்ஜர் ஜோக்கரா நடிக்கறதுக்கு எவ்ளோ மெனக்கெடல் செய்தார்னு எல்லாருக்கும் சொன்னாரு. அதேபோல் 'இரவின் நிழல்' படத்துல வர்ற அந்த அரை நிர்வாணமான காட்சியை ஒரு கலைஞனா ரொம்ப தைரியமா பண்ணியிருந்தீங்க!! அது எல்லாராலும் பேசப்பட்டது. ஆனா, அதுக்குப் பின்னாடி பொது விமர்சனங்கள், குடும்ப ஒத்துழைப்புன்னு நிறைய விஷயங்கள் இருந்திருக்கும். அதெல்லாம் எப்படி சமாளிச்சீங்க?

பதில்- அதான் "காது கேட்காது போடா"ன்னு தான் எல்லா விமர்சனத்தையும் தாண்டி வந்தேன். எதைச் செய்தாலும் இந்த சமூகம் நமக்கு புதுசா ஒண்ணும் சொல்ல போறதில்ல. அதனால, விமர்சனத்தை பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை. எனக்கு கொடுத்த ரோலை நான் சரியா செய்தேன்னு ஒரு ஆத்மார்த்த திருப்தி கிடைச்சது. எனக்கு எதிராக இருந்து இதுதான் என்னோட கதாப்பாத்திரம்னு சொன்னா அதுவாகவே நான் மாறிடுவேன். அது என்ன மாதிரியான கேரக்டராக இருந்தாலும் சரி. கதகளின்னு ஒரு படத்தில் நான் நைட்டி போட்டுத்தான் நடிச்சிருந்தேன். அதை யாரும் பெருசா பேசல. போக்கிரி ராஜான்னு ஒரு படத்தில் பைத்தியக்காரியா புகைப்பிடித்து அவ்ளோ மெனக்கிட்டு நடிச்சேன். அதையும் யாருமே பேசல. இது என்னோட தப்பு இல்ல. மக்களோட பார்வையில் தான் தப்பு இருக்குது. என்னோட கதாப்பாத்திரம் செருப்புனா நான் வெளியே காலணியா நிற்பேன். அதுவே என்னோட கதாப்பாத்திரம் பூ என்றால் பூவாக பூஜையறையில் இருப்பேன். இப்படி தான் கலையை பார்க்கிறேன். என்னோட பெயருக்காகவும் மக்களிடையே எனக்கு பரிட்சயம் வேணும்னு இத நான் பண்ணல. ஒரு இயக்குநரோட கருவா அந்த கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை நான் செய்வேன். ஒரு நொடி ஒரு படத்துல நடித்தாலும் அந்த ரோலுக்கு நான் ஜஸ்டிஸ் பண்ணுவேன் என்றார்.


கேள்வி- உங்களுக்கு நீங்களே ரொம்ப தாழ்வாக உணரும் போது உங்களுக்கு ஒரு ஊக்கமா மோட்டிவேஷனலா இருக்கிறது எது?

பதில- கண்டிப்பா முதல்ல பாட்டு கேட்பேன். இல்லைனா பைபிள், குரான் வாசிப்பேன். அதை வாசிக்கும் போது ஏதோ நம்மளே அதை எழுதுன மாதிரி இருக்கும். இதையெல்லாம் விட‌ நான் அந்த நேரத்தில் எழுதுவேன். எனக்கு எழுத்துன்னா பிடிக்கும். அந்த நேரத்தில் எனக்கு தோனுச்சோ அதை எழுதிருவேன் என கூறினார். இவ்வாறு பல விடயங்களை கூறியிருந்தார்.

Advertisement

Advertisement